"புலி கேக்"
இங்கிலாந்து லெய்செஸ்டர் நகரத்தைச் சேர்ந்த பெண் முந்நூறு மணிநேர உழைப்பில் உயிருள்ள புலியை போன்று கேக் ஒன்றை உருவாக்கியுள்ளார்.
லெய்செஸ்டர் நகரத்தைச் சேர்ந்த ஸோயி பாக்ஸ் (36) தனது முந்நூறு மணிநேர உழைப்பில் புலி போன்ற கேக் வடிவில் தயாரித்துள்ளார். ‘சேவ் த டைகர்’ என்ற விழிப்புணர்வுக் கூட்டத்துக்காக தற்போது உருவாக்கியுள்ளார். தானே சுயமாக பேக்கிங்கைக் கற்றுக்கொண்ட ஸோயி, உண்பதற்கேற்ப உள்ள இந்தப் புலியை, தனது வரைகலை செய்து உருவாக்கியுள்ளார்.
இவர், பேஸ்புக்கில் ‘பேக்கர்ஸ் யுனைட் டு ஃபைட்’ என்கிற அமைப்பைத் தொடங்கியுள்ளார். இவ்வமைப்பின் மூலம், நலிந்துவரும் வன விலங்குகளின் எண்ணிக்கை தொடர்பாக உலக அளவிலான விழிப்புணர்வில் ஈடுபட்டுள்ளார்.
வரும் நவம்பர் 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை பிர்மிங்ஹம் நகரில் நடைபெற உள்ள உலகளாவிய கேக் திருவிழாவில் இந்த அமைப்பின் உள்ளோரின் கேக்குகளும் இடம்பெறும். யானை, பென்குயின், முதலை, சிறுத்தை போன்ற வடிவமைப்பு உள்ள கேக்குகளும் இந்த அமைப்பின் கீழ் உள்ள பெண்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

Post a Comment