உலகின் எந்தவொரு நாடும், தற்போது இலங்கைக்கு எதிராக இல்லை - மைத்திரி பெருமிதம்
உலகின் எந்தவொரு நாடும் தற்போது இலங்கைக்கு எதிரான கொள்கையை கொண்டிருக்கவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
எனவே, அபிவிருத்திக்கான சிறந்த யுகம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
புதிய அரசாங்கம் வறுமையை ஒழிப்பதற்கு முன்னுரிமை வழங்கி செயற்படுவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
உணவு உற்பத்திக்கான தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு கிளிநொச்சி இரணைமடு - வட்டக்கச்சியில் இன்று (05) முற்பகல் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் வட மாகாண முதலமைச்சரும் கலந்து கொண்டார்.
இதன்போது உரையாற்றிய வட மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், வடக்கு கிழக்கு மக்கள் சுதந்திரத்துடனும், மதிப்புடனும் வாழ வேண்டிய தேவையை நிறைவேற்ற வேண்டும் என கோரினார்.
இதனையடுத்து, உணவு உற்பத்தி வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நோக்கில் ஜனாதிபதியும், விவசாயத்துறை அமைச்சர் துமிந்த திசாநாயக்கவும் வயலில் இறங்கி நாற்று நடும் பணியில் ஈடுபட்டனர்.

Post a Comment