மைத்திரி + ரணில் ஆட்சி குறித்து, கடுமையான விமர்சனம்..!
மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தை போன்ற தேசிய அரசாங்கத்திலும் குடும்ப ஆட்சிக்கு வழியேற்படுத்திக் கொடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் தொடர்கின்றன.
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, தமது சொந்தக்காரரான கிஹான் மலலசேரக என்பவரை, ஸ்ரீலங்கா எயார்லைன்ஸின் பிரித்தானியாவுக்கான விற்பனை முகாமையாளராக நியமிக்க முயற்சித்து வருகிறார்.
இந்த பதவிக்கு தகுதியுள்ள பலர் விண்ணப்பித்துள்ள போதும் ரவி கருணாநாயக்க தமது செல்வாக்கை இந்த விடயத்தில் பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பதவி கிடைத்தால் எவ்வித ஆவணங்களும் இன்றி பிரித்தானியாவில் வசிக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கும்.
ஏற்கனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர், டெலிக்கொம்மின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரின் மகள், சத்துரிக்கா, தந்தையின் அதிகாரத்தை பயன்படுத்தி அரசாங்க அதிகாரிகளை கொண்டு சமூக சேவை ஒன்றை நடத்தியிருந்தார்.
மகன் தஹாம், அரசாங்க செலவில் ஐக்கிய நாடுகள் விஜயத்தில் பங்கேற்றிருந்தார்.
இதேவேளை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, தமது சகோதரர் தம்மிக்க ரணதுங்கவை துறைமுக அதிகாரசபையின் தலைவராக நியமித்துள்ளார்.
இவ்வாறாக நல்லாட்சி என வர்ணிக்கப்பட்டுள்ள ரணில் - மைத்திரி கூட்டாட்சியிலும் விமர்சனங்கள் எழுந்தவண்ணம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment