அதிக சக்திவாய்ந்த, ஏவுகணையை பரிசோதித்த ஈரான்
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிக சக்தி வாய்ந்த கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
எமத் (தூண்) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஏவுகணை இலக்குகளை சரிபார்த்து, அவற்றை முற்றிலும் அழிக்கும் திறன் கொண்டது என்றும், தரையில் இருந்து கிளம்பி தரையில் உள்ள மற்றொரு இலக்கை தாக்கி அழிக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இலக்கை தாக்கி அழிப்பதற்காக சென்றுக்கொண்டிருக்கும் போதே ஏவுகணையை கட்டுப்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
திரவ எரிபொருள் மூலம் செலுத்தப்படும் இந்த ஏவுகணை 1,700 கிலோ மீட்டர்கள் தொலைவு சென்று தாக்கக்கூடியது. மேலும் 750 கிலோ எடையை சுமந்து செல்லும் திறன் கொண்டது.

Post a Comment