ரணிலுடன் றிசாத், மைத்திரியுடன் ஹிஸ்புல்லாஹ், ஹக்கீம் எந்தப்பக்கம்..?
-மூத்த ஊடகவியலாளர் Siddeque Kariyapper-
ரிஷாத் –ஹிஸ்புல்லாஹ் அரசின் செல்லப் பிள்ளைகளோ
ஹக்கீம் மட்டும் என்ன சித்தியின் பிள்ளையோ தெரியாது?
ஹக்கீம் மட்டும் என்ன சித்தியின் பிள்ளையோ தெரியாது?
மிக அண்மித்தான காலப் பகுதியில் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கும் அரச உயர்மட்ட தலைவர்கள் சிலருக்குமிடையில் மூடிய கதவுக்குள் நீணட நேரம் கருத்தாடல்கள் இடம்பெற்றுள்ளன.
இதன்போது கிழக்கு மாகாண விசேடமாக மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த முஸ்லிம்களை அதிக எண்ணிக்கையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கீழ் ஒன்றிணைக்கும் பாரிய பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதற்குத் தேவையான வசதிகளை தங்கள் தரப்பால் செய்ய முடியும் என்றும் இதில் தொழில்வாய்ப்புகளை வழங்குவதற்கு முன்னுரிமை அளிப்பதாகவும் அர தரப்பால் உறுதி வழங்கப்பட்டுள்ளது.
அதே போன்று தற்போது வகிக்கும் பிரதியமைச்சர் பதவிக்குப் பதிலாக அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவியை மிக விரைவில் ஹிஸ்புல்லாஹ்வுக்கு வழங்குவதாகவும் அங்கு ஏகமனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் இடம்பெறவுள்ள உள்ளுராட்சி சபை (கிழக்கு மாகாண சபை) தேர்தல்களைக் கருத்தில் கொண்டே இவ்வாறானதொரு கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இவற்றின் ஊடாக ஒரு விடயம் தெளிவாகிறது கிழக்கு மாகாணத்தின் மேற்சொன்ன இரு மாவட்டங்களிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சியை முற்றாகத் தடுக்கும் ஒரு செயற்பாடு உள்ளது போன்றே தெரிகிறது.
இதேபோன்று, அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீதான அக்கறையும் இப்போது அரசு தரப்பார் பக்கம் தீவிரமடைந்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரையும் பெறாவிட்டாலும் அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பெற்ற 33,0000 வாக்குகளே அரச தரப்பின் இந்த அக்கறைக்கு காரணமாகிறது.
முஸ்லிம் காங்கிரஸ் கோட்டையான அம்பாறை மாவட்டத்தில் முதல் தடவையிலேயே 33,000 வாக்குகளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பெற்றுக் கொண்டமையானது ஆட்சியாளர்களையும் சிந்திக்க வைத்துள்ளது.
அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் ரிஷாத் பதியுதீனைச் சந்தித்துப் பேசியமை தொடர்பில் ஊடகங்களில் வெளியான தகவல்கள் ஓரிண்டுதான். உள்ளே நிறைய விடயங்கள் பேசப்பட்டன. ஆனால் அவைகள் ஊடகங்களுக்கு ஒழிக்கப்பட்டு விட்டன.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது அமைச்சு சகாக்களை தனிப்பட்ட முறையில் சந்திக்கும் போது நீண்ட நேரம் எடுக்கமாட்டார். ஆனால், அமைச்சர் ரிஷாத் சந்தித்து பேசிய தினத்தில் ரிஷாத் எழும்பி வரும்வரை ரணில் பேசிக் கொண்டே இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
சில வேளைகளில் அம்பாறை மாவட்டத்திலும் முஸ்லிம் காங்கிரஸுக்கு “அம்போ“ என்ற நிலையை ஏற்படுத்தும் நோக்கம் அரசுக்கு உள்ளதோ தெரியாது. அதற்கான கருவியாக அமைச்சர் ரிஷாத் பயன்படுத்தப்படலாம் அல்லவா?

நமது அரசியல் தலைவர் கள்ஒரு வரை ஒருவர் காட்டி கொடடுக்கும் வேலையை பார்த்துக் கொண்டு இருக்கும் பொது எவ்வாறு சமுதாயம் உருப்படும்
ReplyDeleteஇருவரும் 100% சுயநல அரசியல் செய்பாவர்கள்.
ReplyDeleteதமது நலத்துக்காக எந்த எல்லையையும் மீறுபவர்கள்
தலைவர் யாரையும் சேர்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ரனிலும் மைத்திரியும்தான் தலைவர் பின்னால் வால்பிடிக்க வேண்டும்.
ReplyDelete