Header Ads



காலில் காயம், ஊசிபோட்ட வைத்தியசாலை - ஆசிரியை பரிதாப மரணம்

கராப்பிட்டிய வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் அதிகாரிகளின் கவனயீனம் காரணமாக, ஊசி மருந்தொன்று விசமானதில் தமது மனைவி உயிரிழந்ததாக, பத்தேகம பகுதியைச் சேர்ந்த ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார். 

கனேகொட பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியரான 47வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார். 

காலில் ஏற்பட்ட காயம் ஒன்றுக்காக கராபிட்டிய வைத்தியசாலையில் கடந்த 29ம் திகதி அவர் அனுமதிக்கப்பட்டார். 

பின்னர் 30ம் திகதி அவருக்கு வழங்கப்பட்ட ஊசி மருந்தை அடுத்து, அவர் கடுமையான நிலைக்கு உள்ளானதாக அவரது கணவர் தெரிவித்துள்ளார். 

பின்னர் அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் உயிரிழந்தார். 

இது சம்பந்தமாக H Fm செய்திப்பிரிவு கராபிட்டிய வைத்தியசாலையை தொடர்பு கொண்ட போது, இது குறித்த விசாரணைகள் நிறைவடைவதற்கு முன்னதாக எந்த கருத்தையும் வெளியிட முடியாது என்று, அதன் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.