Header Ads



"ரவூப் ஹக்கீமுக்கு, கிடைத்த வெற்றி"

தலைவர் ஹகீம்  தனது உயிருக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் , அரச தலைவர் மற்றும் பேரினவாதிகளின் கடுமையான விமர்சனங்களுக்கு மத்தியில் இந்த சமுகத்தின் நலன்கருதி இலங்கையில் மத வன்முறை என்ற தலைப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் 2013/08/26  திகதி  அன்றைய ஐக்கிய நாடுகளுக்கான மனித உரிமை செயலாளர் நவிதம் பிள்ளை அவர்களிடம் 50 பக்கங்கள் கொண்ட அறிக்கையை சமர்பித்தார்கள் . அதில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பல்வேறு அநீதிகளை சுட்டி காட்டிருந்தர்கள் .

அவ்வறிக்கை காரணமாக தற்போது நடைபெற்று கொண்டு இருக்கும்  ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலும் இலங்கை முஸ்லிங்கள் சார்பான கரிசனையும்  எதிரொலித்துள்ளது  இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை குறித்த விவாத்தின் போது கருத்து தெரிவித்த மனித உரிமைகள் ஆணையாளர் ஸெய்த் அல் ஹுஸைன் அவர்கள் முஸ்லிம்கள் மீதான தாக்குதல் குறித்து அப்போதைய அரசு விசாரணை நடத்தவில்லை என தெரிவித்துள்ளார்.  இது தலைவர் ஹகீம் அவர்களின் சாணக்கியத்துக்கு கிடைத்த வெற்றியாகும் 

தலைவர் ஹகீம் அவர்கள் 50 பக்க அறிக்கயை  சமர்பித்தபோது  ஜனாதபதி அவர்களும்,  ஹெல உறுமய ,தேசிய சுதந்திர முன்னணி  ,பொதுபல சேனா மற்றும் பல இனவாத கட்சிகள்   தலைவர் ஹகீம்  அவர்களை கடுமையாக விமர்சித்தார்கள்.  இவ்வறிக்கை சமர்பித்த பின்னர் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முன்னைநாள் ஜனதிபதி மஹிந்த  அமைச்சரவையில் நீங்கள் இருக்க வேண்டுமா என்று தீர்மாணிக்கு மாறும் தலைவர் ஹகீம் அவர்களை நோக்கி  குறிப்பிடு இருந்தார் . மேர்வின் சில்வா பிரபகரனுக்கு நடந்த கதிதான் உமக்கு நிகழும் என்று மரண அச்றுத்தல் விடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது .

-மருதூர் FARAH -

9 comments:

  1. It is not correct, He cannot win while community is suffering, so far he didn't do any remarkable to Muslim community, SLMC is just a political party it is not Muslim's party anymore, this man changed it,
    May Allah Guide him on right path

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ். பொறுமையாக இருந்தால் அல்லாஹ்வின் வெற்றி நிச்சயம் நமக்கு கிடைக்கும்.அன்று விதைத்தது இன்று அறுவடை செய்யப்படுகிறது.ரவுப் ஹக்கீம் அன்று சொன்னதை மக்கள் மறந்துவிட்டார்கள்.ஆனால் உள்ளால் மருந்து வேலை செய்து கொண்டுதான் இருக்கிறது.

    ReplyDelete
  3. இப்போதாவது தலைவர் அவர்களுக்கு மேவின் சில்வாவை அடைக்கமுடியாதா? நம்ம தலைவர் ரொம்ப நல்லவர் பிரச்சிணைக்கு போகமாட்டார்

    ReplyDelete
  4. நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) யும் நவீன் பிள்ளையிடம் முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகள் தொடர்பான காரமான அறிக்கையினை கையளித்திருந்தனர். அவ்வேளை அறிக்கையை சமர்ப்பித்தது தொடர்பாக சிறி லங்கா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபையினர்கள் விசாரணைக் குட்படுத்தப் பட்டிருந்தனர்.
    இந்த சம்பவத்தை நவீன் பிள்ளை ஐ நாவில் பேசியிருந்ததும் இவ்விடத்தில் சுட்டிக்காட்டத் தக்கது.

    ReplyDelete
  5. இவ்வறிக்கை முழுக்க முழுக்க ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் நாயகம் சகோதரர் ஹசன் அலி அவர்களால் தயாரிக்காப்பட்டு அவரது கையப்பத்தோடு, அப்போதைய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் செயலாளர் நாயகம் நவநீதம் பிள்ளை அவர்களிடம் பல அழுத்தங்களுக்கு மத்தியில் கொழும்பிலே வைத்து நேரடியாகவே கைய்யளிக்கப்பட்டது.

    இவ்வறிக்கை பற்றி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் அமைச்சரவையிலே காரசாரமாக கேள்விகள் கேட்ட போதுகூட, இதற்கும் தனக்கும் தொடர்பில்லை, இதை செயலாளரிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும் என்று தலைவர் பகிரங்கமாகவே தெரிவித்தார்.

    இதை இங்கு தெரிவிப்பதன் நோக்கம் இதை யார் கொடுத்தார், யார் இதற்கு பொறுப்பானவர் என்பதற்கல்ல. பொது இடங்களில் விடயங்களை அறிவிப்பவர்கள் பத்திரிக்கை தர்மத்தை கடைப்பிடித்து உண்மையை அப்படியே சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான்.

    ReplyDelete
  6. he handed over the report to UN and stayed with mahinda for his ministry post and switched sides at the last minuite ( i think after the postal votes ) after realizing my3 is going to win.

    ReplyDelete
  7. I agree with Sayedkhan who correctly made the point. It was Mr Hassan who fearlessly submitted the Report. However Mr Rauf Hakeem is luck enough to the credit.

    ReplyDelete
  8. அறிக்கையை தயாரித்தவர் ஹஸன் அலி எனக் கூறாமல் மு.கா.வின் செயலாளர் நாயகம் செய்தார் என்பதுதான் சாலப் பொருத்தம் எந்த அப்பன் ஊட்டும் சொத்தல்ல மு.கா. அ மக்கள் சொத்து(முஸ்லீம் இயக்கம்)இந்த இயக்கத்தில் இருந்து கொண்டு யார் எதை செய்தாலும் அது பொது விதி மக்களுக்காக செய்யப்பபடுகின்ற. அர்ப்பணிப்பு தனிப்பட்டவர் பெயர் சொல்லி தனக்காக்கி கொள்வதென்பது ஒரு இயக்கத்தை உடைபதற்க்காக காட்டிக் கொடுக்கும் செயல்

    ReplyDelete
  9. @ Muzammil Hazeem ;

    தலைவர் ரவூப் ஹகீமோ, செயலாளர் ஹசன் அலியோ மலிவான விளம்பங்களின்பால் ஈர்க்கப்பட்டவர்களல்ல. அதற்கு அவர்களுக்கு அவசியமும் இல்லை. உண்மையில் இக்கட்டுரையின் தலைப்பே "முஸ்லிம் காங்கிரசுக்கு கிடைத்த வெற்றி" என்றிருந்திருக்க வேண்டும்.

    எனது பின்னூட்டத்தின் நோக்கம் அதுவல்ல. அதை தெளிவாகவே சொல்லிவிட்டேன். பொது இடங்களில் கருத்துக்களை வெளியிடும்போது அதன் உண்மைத்தன்மை பிறழாமல் பத்திரிக்கை தர்மத்தை கடைப்பிடிக்கும் படியே கூறியிருந்தேன். முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயல்வது தனக்கு தானே முட்டாள் பட்டம் சூட்டிக் கொள்ளும் ஒரு விடயமாகும்.

    "அர்ப்பணிப்பு தனிப்பட்டவர் பெயர் சொல்லி தனதாக்கி கொள்வதென்பது ஒரு இயக்கத்தை உடைப்பதற்காக காட்டிக்கொடுக்கும் செயல்" என்று நீங்கள் சொல்லியிருப்பது உண்மை. அது இந்த கட்டுரையை எழுதியவருக்கே சாலப் பொருந்தும்.

    ReplyDelete

Powered by Blogger.