5 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினைக் கடத்திவந்த மூவர் விமான நிலையத்தில் கைது
இந்தியாவிலிருந்து ஐந்து கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினைக் கடத்தி வந்த பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (04) அதிகாலை இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
சென்னையிலிருந்து இலங்கை வந்த விமானத்தில் வருகை தந்த பயணிகளின் பொதிகளை சோதனையிட்ட போது, மறைத்து வைக்கப்பட்ட நிலையில் எடுத்து வரப்பட்ட இந்த ஹெரோயின் தொகை சுங்கப் பிரிவினரிடம் சிக்கியுள்ளது.
சுமார் ஐந்து கிலோ எடைகொண்ட இந்த ஹெரோயின் தூளின் பெறுமதி ஐந்து கோடி ரூபா அளவில் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஹெரோயின் கடத்தி வந்த ஒரு பெண் உள்ளிட்ட மூவர் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Post a Comment