2 பிக்குகள், 5 பெண்கள், 39 மாணவர்கள் கைது - பொலிஸ் உத்தியோகத்தர் காயம் (படங்கள்)
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்னால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில் 39 மாணவர்கள் பம்பலப்பிட்டி பொலிஸரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.இவற்றில் இரண்டு பிக்கு மாணவர்களும் மாணவிகள் ஐவரும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப் புகை பிரயோகங்களை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இந்த சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.



Post a Comment