Header Ads



ஜப்பானில் ரணில் - 45,000 ரூபா கோடி நிதி, வேலை வாய்ப்புகளை பெறவும் தீவிரம்

உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று (03) அதிகாலை ஜப்பானை சென்றடைந்தார்.

இதன்போது, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கன்சாய் சர்வதேச விமானநிலையத்தை சென்றடைந்த பிரமருக்கு பலத்த வரவேற்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பிரதமர், இன்றைய தினம் (04) கியாதோ நகரில் நடைபெறவுள்ள சர்வதேச விஞ்ஞான தொழில்நுட்ப மாநாட்டில் விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.

இந்நிகழ்விற்கு, விஞ்ஞான, தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சிகள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

கடந்த 2003 இல் இடம்பெற்ற டோக்கியோ உதவி மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இலங்கைக்கு ரூபா 45,000 கோடி நிதியினை பெற்றுக் கொள்வதற்கு வழியமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரதமரின் தற்போதைய விஜயத்தின்போது, இலங்கையிலுள்ள இளைஞர், யுவதிகளுக்கு சுமார் 10 இலட்சம் வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுப்பதன் அடிப்படையில், ஜப்பானுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் தம்மிக கங்காநாத் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.