கரடிக்கு ஆங்கிலம் புரியுமா..? கெஞ்சும் பெண், 25 இலட்சம் பேர் பார்த்த வீடியோ
அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தைச் சேர்ந்த மேரி மாலேய் என்ற பெண், தனிமையை விரும்பி கயாக் என்ற சிறு படகுடன் பொக் விரிகுடா பகுதியில் தங்கியிருந்தார். அப்போது, அங்கு ஒரு கரடி வந்துள்ளது. அது தனது படகை சேதப்படுத்திவிடுமோ? என்று பயந்த மேரி மாலேய் பெப்பர் ஸ்பிரே அடித்து கரடியை துரத்த முற்பட்டார். ஆனால், பின்வாங்கிய கரடியோ அவரது படகை அடித்து சேதப்படுத்திவிட்டது. இதனை வீடியோவாக எடுத்து யுடியூபில் பதிவேற்றியுள்ளார்.
‘ஆனால், இவரது ஆங்கில அழுகையைக் கண்டு வெறுப்படைந்த கரடி, அந்த கயாக்கை சேதம் செய்து விட்டது’ எனப் பலரும், சில நாட்களுக்கு முன் யூடியூபில் வெளியான மேரியின் வீடியோவைக் கிண்டல் அடித்துள்ளனர்.
சுமார் இருபத்தைந்து லட்சம் பேர் பார்த்த இந்த வீடியோ முழுவதும் மேரி, அந்தக் கரடியை பெப்பர் ஸ்பிரே அடித்து துறத்த பார்த்து முடியாது போனதால், ஆங்கிலத்தில் கெஞ்சிக் கேட்டும் மதிக்காமல் அந்தப் படகைச் சேதப்படுத்தும் கரடியை நோக்கி கதறி அழுவதாக வெளிவந்துள்ளது.
ஆள் அரவமற்ற இப்பகுதியிலிருந்து, வேறொரு படகுடன் தனது வீட்டுக்கு மேரி எப்படியோ போய்சேர்ந்துவிட்டாராம்! வீடியோ

Post a Comment