ஒரு நாளில் 20.000 முறை தும்மும் சிறுமி (வீடியோ)
ஒரு நாளின் இரண்டு, மூன்று தும்மல்கள் நம்மை எந்தளவு பாதிக்கின்றது! இருபதாயிரம் முறை ஒரே நாளில் தும்மல் ஏற்பட்டால்.. என்ன ஆவோம்!
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தின் ஹியூஸ்டன் நகரைச் சேர்ந்த கேட்டலின் தோர்ன்லேவுக்கு (12) சில வாரங்களாக தும்மல் ஆரம்பித்தது. சாதாரணமான தும்மலல்ல இது, ஒரு நிமிடத்துக்கு இருபது முறை, அதாவது ஒரு நாளில் மட்டும் இருபதாயிரம் முறை தும்முகின்றார்.
மருத்துவர்களாலும் இது ஏன் ஏற்பட்டது? எனக் கண்டறிய முடியவில்லை! இந்தப் பிரச்சனைத் தொடங்கியது முதல் உண்ணவோ, உறங்கவோ முடியாமல் அடிவயிற்றில் கேடலினுக்கு கடும் வலி ஏற்படுகிறது. எனினும், ஒரே ஆறுதலாக ‘பீட்டல்ஸ்’ குழுவின் இன்னிசை மட்டுமே தும்மல் வராமல் தடுப்பதாக நம்புகின்றாள் கேட்டலின்.
இந்தச் சிறுமி படும் கொடுமையை உணர்த்தும் சிறிய வீடியோ தொகுப்பு
Post a Comment