Header Ads



15 நிமிடங்கள் வாய்ப்பு, நழுவினார் மகிந்த..!

முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ, நேற்று(23) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் தொடர்பான விவாதத்தில் கலந்து கொள்ளவில்லை. 

ஜெனீவா தீர்மானம் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கை தொடர்பான விவாதம் நேற்று நாடாளுமன்றில் இரண்டாவது நாளாகத் தொடர்ந்தது. நேற்றைய விவாதத்தில், எதிர்க்கட்சி தரப்பில் ஐந்தாவது உறுப்பினராக 15 நிமிடங்கள் உரையாற்ற வாய்ப்பளிக்கப்பட்டது. 

இதனையடுத்து, மஹிந்த விவாதத்தில் பங்கேற்கமாட்டார் என டலஸ் அழகப்பெரும கூறியதையடுத்து, ஏனைய உறுப்பினர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. 

1 comment:

  1. மஹிந்த பாராளுமன்றத்தில் உரையாற்றாமல் போனது ஒருவகையில் நியாயம்தான்.அவர் உரையாற்றி இருந்தால் பல வாதங்கள் வந்திருக்கும் இன்னும் பல பிரச்சினைகள் நாட்டுக்கு வரலாம்.உத்தம் சம்மந்தமான எல்லா குற்றத்தையும் மகிந்தவின் தலையில் போடவும் முடியாது.நியாயமாக நடு நிலையாக சிந்தித்தால் பல நியாயங்களை நிருபிக்க முடியும்.

    ReplyDelete

Powered by Blogger.