இஸ்லாமிய ஹிஜ்ரி ஆண்டு 1437ல் நுழையப் போகும் இவ்வேளையில்...!
-ACJU-
இஸ்லாமிய ஹிஜ்ரி ஆண்டு 1436 முடிவடைந்து 1437ல் நுழையப் போகும் இவ்வேளையில் புதுவருட கொண்டாட்டங்கள் இஸ்லாத்தில் இல்லாத போதும் உணர்வு ரீதியான சில விடயங்களை முஸ்லிம்களாகிய நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு புது வருடம் பிறந்து விட்டதே என மகிழ்ச்சியடைவதை விட எனது வாழ் நாளில் ஒரு வருடம் குறைந்து விட்டதே என்ற உணர்வு ஒவ்வொரு முஃமினது உள்ளத்திலும் உதயமாகி மன உறுத்தல் ஏற்பட வேண்டும். எஞ்சி இருக்கும் காலம் எவ்வளவு என்பது தெரியாது. கடந்த வருடத்தின் குறைகளை சரி செய்து எஞ்சியிருக்கும் காலத்தில் இறையன்பையும், திருப்தியையும் நோக்காகக் கொண்டு செயற்பட வேண்டும் என்று உறுதி கொள்ள வேண்டும்.
இஸ்லாமிய புதுவருடமாவது சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் நடைபெற்ற ஒரு போராட்டத்தின் அடிப்படையில் நிகழ்ந்த 'ஹிஜ்ரத்' நிகழ்வை வைத்தே உருவாக்கப் பட்டிருக்கிறது. ஆனால் புரட்சிமிக்க இந்நிகழ்வை வைத்து ஆரம்பிக்கப்படும் புது வருடத்தை புறந்தள்ளி விட்டு மாற்று மதத்தினரின் புது வருட நிகழ்வினைக் கொண்டாடுவதானது மிகவும் கவலைக்கிடமான செய்தியாகும். மட்டுமல்லாது இச்செயலானது நபி வழிக்கு மாற்றமானதும் ஆகும்.
அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஜாஹிலிய்யா கால மக்களிடம் வருடத்தில் இரு நாட்கள் கொண்டாடி மகிழ்வதற்காக இருந்தன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது, நீங்கள் வருடத்தில் விளையாடி மகிழும் இந்த இரு நாட்களுக்கு இரு நாட்களை பகரமாக அல்லாஹ் உங்களுக்கு வழங்கியிருக்கின்றான். அவைகள்: நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு தினங்களாகும் என நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.;, (நூல்: நஸாஈ)
அல்லாமா இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் இந்த நபி மொழிக்கு வியாக்கியானம் செய்யும் போது: 'நிராகரிப்பாளர்களின் பெருநாட்களை கொண்டாடுவதும், அவர்களுக்கு ஒப்பாவதும் வெறுப்பான ஒரு விடயம் எனக் குறிப்பிடுகின்றார்கள்'.
முஸ்லிம்களின் புது வருடமான முஹர்ரம் மாதத்தைக் கூட கொண்டாடி மகிழ நபி வழியில் ஆதாரங்கள் இல்லையென்றால் ஏனைய புது வருடங்களைக் கொண்டாட இஸ்லாத்தில் எங்கே அனுமதி இருக்கிறது? என்பதை முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டும்.
'எவன் ஒரு கூட்டத்திற்கு ஒப்பாவானோ அவனும் அந்தக்கூட்டத்தைச் சேர்ந்தவனேயாவான்' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அபூதாவுத்).
இஸ்லாமிய ஹிஜ்ரி ஆண்டு 1436 முடிவடைந்து 1437 ல் நுழையப் போகும் இவ்வேளையில் புதுவருட கொண்டாட்டங்கள் இஸ்லாத்தில் இல்லாத போதும் உணர்வு ரீதியான சில விடயங்களை முஸ்லிம்களாகிய நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு புது வருடம் பிறந்து விட்டதே என மகிழ்ச்சியடைவதை விட எனது வாழ் நாளில் ஒரு வருடம் குறைந்து விட்டதே என்ற உணர்வு ஒவ்வொரு முஃமினது உள்ளத்திலும் உதமாகி மன உறுத்தல் ஏற்பட வேண்டும். எஞ்சி இருக்கும் காலம் எவ்வளவு என்பது தெரியாது. கடந்த வருடத்தின் குறைகளை சரி செய்து எஞ்சியிருக்கும் காலத்தில் இறையன்பையும், திருப்தியையும் நோக்காகக் கொண்டு செயற்பட வேண்டும் என்று உறுதி கொள்ள வேண்டும்.
இஸ்லாமிய புதுவருடமாவது சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் நடைபெற்ற ஒரு போராட்டத்தின் அடிப்படையில் நிகழ்ந்த 'ஹிஜ்ரத்' நிகழ்வை வைத்தே உருவாக்கப் பட்டிருக்கிறது. ஆனால் புரட்சிமிக்க இந்நிகழ்வை வைத்து ஆரம்பிக்கப்படும் புது வருடத்தை புரந்தள்ளி விட்டு மாற்று மதத்தினர்களின் புது வருட நிகழ்வினைக் கொண்டாடுவதானது மிகக் கவலைக்கிடமான செய்தியாகும். மட்டுமல்லாது இச்செயலானது நபி வழிக்கு மாற்றமானதும் ஆகும்.
அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஜாஹிலிய்யா கால மக்களிடம் வருடத்தில் இரு நாட்கள் கொண்டாடி மகிழ்வதற்காக இருந்தன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது, நீங்கள் வருடத்தில் விளையாடி மகிழும் இந்த இரு நாட்களை விட சிறந்த இரு நாட்களை அதற்குப் பகரமாக அல்லாஹ் உங்களுக்கு வழங்கியிருக்கின்றான். அவைகள்: நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு தினங்களாகும் என நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.;, (நூல்: நஸாஈ)
அல்லாமா இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் இந்த நபிக்கு வியாக்கியானம் செய்யும் போது: 'நிராகரிப்பாளர்களின் பெருநாட்களை கொண்டாடுவதும், அவர்களுக்கு ஒப்பாவதும் வெறுப்பான ஒரு விடயம் எனக் குறிப்பிடுகின்றார்கள்'.
முஸ்லிம்களின் புது வருடமான முஹர்ரம் மாதத்தைக் கூட கொண்டாடி மகிழ நபி வழியில் ஆதாரங்கள் இல்லையென்றால் ஏனைய புது வருடங்களைக் கொண்டாட இஸ்லாத்தில் எங்கே அனுமதி இருக்கிறது? என்பதை முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டும்.
'எவன் ஒரு கூட்டத்திற்கு ஒப்பாவானோ அவனும் அந்தக்கூட்டத்தைச் சேர்ந்தவனேயாவான்' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அபூதாவுத்).
எனவே நாம் நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றி அல்லாஹுதஆலாவின் பூரண திருப்தியைப் பெற்றுக்கொள்ள முயற்சிப்போமாக!

Post a Comment