Header Ads



BCAS Campus யின் கல்முனை வளாகத்தின், சான்றிதழ் வழங்கும் வைபவம்

 BCAS Campus  யின் கல்முனை வளாகத்தின் முதலாவது சான்றிதழ் வழங்கும் வைபவம் சாய்ந்தமருதில் வளாகத்தின் முகாமையாளர் 'உவைஸ் மொஹிதீன் பாவா'  தலைமையில் நடைபெற்றது. 

இவ்வைபவத்தில் பிரதம அதிதியாக  BCAS Campus யின் தவிசாளர் பொறியிலாளர் 'அப்துல் றகுமான்' அவர்களும், கௌரவ அதிதியாக 'பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவின் (ugc) முன்னாள் தலைவரும், கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உப வேந்தரும் தற்போதைய டீஊயுளு ஊயஅpரள யின் சிரேஷ்ட மாணவ ஆலோசகருமான பேராசிரியை திருமதி 'ஷாணிகா ஹிரும்புரிகம' அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

'தற்கால உலகம் கல்வியை மையமாக கொண்ட பொருளாதார உலகமாக மாறிவருகின்றது. விவசாயம், மீன்பிடித்துறை உட்பட எந்தவொரு துறையானாலும் சரி பொருத்தமான தொழிநுட்பத்தினைப் பயன்படுத்துவதன் மூலமாகத்தான் எதிர்கால உலகினை வெற்றிகொள்ள முடியும். உயர்கல்வி என்று வரும்போது அரச பல்கலைக் கழகங்களுக்கு செல்வதற்கான வாய்ப்பில்லை என்ற தீர்மானத்திற்கு வந்த பிறகுதான் தனியார் உயர்கல்வி நிறுவனங்களை மாணவர்கள் நாட வேண்டும்' என பிரதம அதிதியாக கலந்து கொண்ட பொறியிலாளர் அப்துல் றகுமான் தனது உரையில் குறிப்பிட்டார். 

கௌரவ அதிதியாக கலந்து கொண்ட ருபுஊ யின் முன்னாள் தலைவரும் கொழும்பு பல்கலைக் கழகத்தின் முன்னாள் உப வேந்தருமாகிய பேராசிரியை 'ஷாணிகா ஹிரும்புரிகம' அவர்கள் தனதுரையின் போது 

'இலங்கையில் கிழக்கு மாகாணம் மிக செல்வ செழிப்புடன் விளங்குகின்றது. காரணம் வருமானம் தரக்கூடிய இயற்கை வளங்கள் இங்கு நிறைய உண்டு. கல்முனையில் டீஊயுளு வளாகம் அமைந்துள்ளமை இப்பிரதேச மாணவர்களுக்கு மிகப் பெரிய வரப் பிரசாதமாகும். ஒரு வருட காலத்திற்குள் சுமார் 132 மாணவர்கள் தமது பட்டப்படிப்பிற்கான அடிப்படைப் பாட நெறியினைப் பூர்த்தி செய்து இன்று சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்வதென்பது மிக மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்' என குறிப்பிட்டிருந்தார்.      

தகவல் - பைசர் அமான். 



No comments

Powered by Blogger.