Header Ads



மனநலம் பாதித்த பெண்ணை, பாலியல் துஸ்பிரயோகம் செய்த பிக்கு கைது

பொலன்னறுவை பிரதேசத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணொருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பிக்கு ஆயுர்வேத மருத்துவ நிலையம் ஒன்றை நடத்தி வருவதாகவும், அங்கு சிகிச்சை பெறச் சென்றிருந்த வேளையிலேயே அவர் மனநலம் பாதித்த பெண்ணை கடுமையான பாலியல் துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கியிருப்பதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பிக்குவுக்கு 50 வயது எனவும், அவரால் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட பெண்ணுக்கு 42 வயது என்றும் தெரியவந்துள்ளது.

இன்று (30) காலை பொலன்னறுவை ஹிங்குராக்கொடை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட பிக்கு ஒரு லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். வழக்கு எதிர்வரும் மாதம் 20ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

6 comments:

  1. வேளிகளும் பயிர மேயும் காலமாச்சி

    ReplyDelete
  2. கடவுள், மதம், புனிதம், பக்தி, இவற்றை நம்பும் வரை இதுதான் நிலமை.

    ReplyDelete
  3. இந்த செயலுக்கும், கடவுள் பக்தி மதத்திட்கும் எந்த சம்பதமும் இல்லை. மதத்தயோ ,கடவுளையோ நம்பாதவர்கள் குற்றம் செய்யாமல்இல்லை என்கிற போது ,நிலவன்! எப்படி இதை கடவுள் ,மதம்,பக்தியோடு சம்மதம் படுத்துகிறார் ?

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. musthafa jawfer அவர்களே!
    "Kadumayaka penned thuspirayokam saithawanukku satire puns koduththa neethawsna muthlil Kathy saiya wendum enna nadu ithu"
    "கடுமையாக பெண்ணை துஷ்பிரயோகம் செய்தவருக்கு சரீர பிணை கொடுத்த நீதவானை முதலில் கைது செய்ய வேண்டும், என்ன நாடு இது" என்று அல்லவா கூறி இருக்கிறீர்கள்.
    கணம் jaffna muslim ஆசிரியர் அவர்களே, தயவு செய்து மேற் குறிப்பிட்டது போன்ற "இங்கிலீஷ் இல் தமிழ்" கருத்துரைகளை தெளிவாக்கி திருத்தி பதிவு செய்தால் அதிகமான வாசிகர்கள் பயன் பெறுவார்கள். ஏனென்றால் மேலே உள்ளதை decode செய்வது எளிதான காரியமல்ல.
    அடுத்த முக்கியமான விடயம், - நீதித்துறைக்கு எதிரான கருத்துக்கள் முலம் சட்டத்தின் முன் நிற்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே "நீதவானை முதலில் கைது செய்ய வேண்டும்" என்ற பகுதியை jaffna muslim வாபஸ் செய்து கொண்டால் நல்லது.

    ReplyDelete
  6. என்னய்யா கர்மம் இது இந்த தவறை வேறு யாரேனும் செய்தால் உடனே ரிமாண்ட் பிக்குசெய்தால் பெயில் பிறந்தாலும் பிக்குவாக பிறக்க வேண்டுமைய்யா நம்ம நாட்டிலே இந்த நாட்டிலே

    ReplyDelete

Powered by Blogger.