கல்வி கற்கவே, பாணந்துறை வங்கியில் கொள்ளையடித்தேன்
பாணந்துறை தனியார் வங்கி கிளை ஒன்றில் ஐந்து லட்சம் ரூபா பணத்தை கொள்ளை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகத்துக்குரியவரை 7 நாள் தடுத்து வைத்து விசாரணை செய்ய காவற்துறைக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்துக்குரியவர் நேற்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
கைதானவர் ரஷ்யாவின் மொஸ்கவ் பல்கலைகழத்தில் கல்வி பயின்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கல்வியை தொடர்வதற்கான நிதி இல்லாததன் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவர் மீண்டும் நாடு திரும்பியதாக பாணந்துறை - தெற்கு காவற்துறையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மீண்டும் கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு பணம் இல்லாததன் காரணமாக வங்கி கொள்ளையில் ஈடுபட்டதாக சந்தேகத்துக்குரியவரின் வாக்கு மூலத்தில் தெரியவந்துள்ளது.

i believe him and sorry for him and his parents.
ReplyDelete