Header Ads



"ஜெனீவாவில் மூடிய கதவுகள், சாதித்துக்காட்டிய ரணில்"

இலங்கை படையினரும் விடுதலைப்புலிகளும் யுத்தகுற்றங்களில் ஈடுபட்டனர் என்பது விசாரணை அறிக்கை மூலம் வெளியானதை தொடர்ந்து கடந்தவாரம் அரசாங்கம் பல முனைகளில் தீவிரநடவடிக்கைகளை முன்னெடுத்தது.

இதேகாலப்பகுதியில் இலங்கை தொடர்பான அமெரிக்க தீர்மானத்தின் முதலாவது நகல்வடிவம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலின் உறுப்பு நாடுகள் மத்தியில் இடம்பெற்ற உத்தியோகப்பற்றற்ற கலந்துரையாடலின் போது சில மாற்றங்களிற்குள்ளானது.

இதில் அனேக மாற்றங்கள் இலங்கைக்கு சாதகமாக காணப்பட்ட அதேவேளை பொதுநலவாய மற்றும் வெளிநாட்டு நீதிபதிகள், சட்டத்தரணிகள், விசாரணையாளர்கள் பற்றி குறிப்பிடப்பட்ட விடயங்கள் நீடிக்கின்றன.

சர்வதேசம் என்ற சொல் அகற்றப்பட்டதற்கும், தீர்மானம் மென்மையான வடிவம் பெற்றமைக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் முயற்சிகளே காரணம், திங்கட்கிழமை அவர் இது தொடர்பாக  இலங்கைக்கான பிரிட்டனின் தூதுவருடன் கலந்துரையாடினார்,இந்த சந்திப்பு அலரி மாளிகையில் இடம்பெற்றது.

அதன் பின்னர் அவர் ஜெனீவாவில் தற்போதுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அப்துல் கெசாப்புடன் உரையாடினார்,இந்த தொலைபேசி உரையாடலில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் மற்றும் இலங்கைக்கான பிரிட்டனின் தூதுவர் ஆகியோரும் இணைந்துகொண்டனர்.

விசாரணை பொறிமுறை குறித்து குறிப்பிடும்போது சர்வதேச என்ற பதத்தை தவிர்ப்பது குறித்தே இலங்கை பிரதமர் முக்கியமாக கவனம் செலுத்தினார்.

வெளிநாடு என்ற பதம் பயன்படுத்தப் பட்டதற்கான முன்னுதாரணங்கள் உள்ளதாக அரசவட்டாரங்கள் வலியுறுத்தின. இதன் பின்னர் தமிழ் தேசியகூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மீண்டும் ஜெனீவா சென்று ஐக்கியநாடுகளிற்கான  அமெரிக்காவின் பிரதி தூதுவர் சிசனை சந்தித்து உரையாடினார், இந்த பேச்சுவார்த்தைகள் மூலம் இறுதி தீர்மானம் குறித்த முடிவு எட்டப்பட்டது. சர்வதேச என்ற சொல்லிற்கு பதில் வெளிநாட்டு என்ற சொல்  மாற்றப்பட்டது, பொதுநலவாய நீதிபதிகளும் ஏனையவர்களும், உள்வாங்கப்படுவதற்கான வழிபிறந்தது.

லண்டனுடனும், அமெரிக்காவுடனும் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின் போது பிரதமர் விக்;கிரமசிங்க குற்றவாளிகளை விசாரணைசெய்து தண்டிப்பதற்கான ஏற்பாடுகள் அரசமைப்பின் கீழ் உள்ளன, இதன் காரணமாக சட்டங்களில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியதில்லை என குறிப்பிட்டுள்ளார்.

செவ்வாய்கிழமை வெளியான இரண்டாவது நகல்வடிவே இறுதிதீர்மானமாகும், இதனை ஓரு மணிக்கு சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் பல நாடுகளில் இடம்பெற்ற தீவிர தொலைபேசி உரையாடல்கள் காரணமாக அது மூன்று மணிநேரம் தாமதமானது.

அது ஜெனீவா நேரப்படி 17.17ற்கு வெளியானது.இலங்கை அமெரிக்க பிரதிநிதிகள் மூடிய கதவுகளின் பின்னால் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட வேளை பதட்டமான நிலை காணப்பட்டது.

No comments

Powered by Blogger.