Header Ads



குண்டுடன் விளையாடிய சிறுவர்கள் - காப்பாற்றிய பொலிசார்

பொலன்னறுவை பிரதேசத்தில் கைக்குண்டு ஒன்றுடன் சிறுவர்கள் விளையாடிய தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசாரினால் பாரிய விபத்தொன்று தடுக்கப்பட்டுள்ளது.

பொலன்னறுவை விஜயபுர பிரதேசத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது, பொலன்னறுவை விஜயபுர சிறுவர்கள் குழுவொன்று காட்டுக்குள்ளிருந்து கைவிடப்பட்ட நிலையில் இருந்த கைக்குண்டொன்றைக் கண்டெடுத்துள்ளனர்.

எனினும் குறித்த பொருள் என்னவென்று அவர்கள் அறிந்திருக்கவில்லை.

வீட்டுக்கு எடுத்து வந்த அவர்கள் கைக்குண்டை தரையில் அடித்துப் பார்த்தபோதும் அதிர்ஷ்டவசமாக வெடிக்கவில்லை. இதனையடுத்து பந்துபோல அதனை உருட்டி விளையாடிக் கொண்டிருந்துள்ளார்கள்.

இதுகண்ட அயலவர் ஒருவர் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த பொலிசார் கைக்குண்டைக் கைப்பற்றி, பாரிய விபத்தொன்றிலிருந்து சிறுவர்களைப் பாதுகாத்துள்ளனர்.

பின்னர் பொலிசாரினால் எடுத்துச் செல்லப்பட்ட கைக்குண்டு பொலிஸ் நிலையத்தில் வைத்து செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.