Header Ads



இறைவனிடம் பிரார்த்தியுங்கள் - றிசாத்

புனித ஹஜ் கடமையினை நிறைவு செய்த பின்னர் புனித மக்காவில் ஏற்பட்ட சன நெருக்கடியில் தமது உயிர்களை இழந்த அனைவரினதும் சுவனத்திற்காகவும்,காயமுற்ற அனைவரினதும் உடல் சுகத்திற்காகவும் இறைனிடம் பிரார்த்திக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் இலங்கை வாழ் முஸ்லிம்களிடமும்,வெளிநாடுகளில் வசித்துவரும் இலங்கை முஸ்லிம்களிடமும் வேண்டுகோளினை விடுத்துள்ளார்.

மக்காவில் ஏற்பட்ட சனநெருக்குதலில் 700 க்கும் மேற்பட்ட சகோதர,சகோதரிகள் வபாத்தாகியதுடன்,நுாற்றுக் கணக்கானவர்கள் காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்திகைள கேள்வியுற்று தாம் கவலையடைந்துள்ளதாகவும்,இவர்களது குடும்பத்திற்காகவும் பிரார்த்திக்குமாறும் அமைச்சர் றிசாத் நிசாத் பதியுதீன் கேட்டுள்ளார்.

இறைவனின் நாட்டத்தின் படியே எல்லாம் நடைபெறும் என்ற அடிப்படை அசைாயத கொள்கையினை ஏற்றுக்கொண்ட சமூகம் என்ற படியால் பொறுமையாகவும்,நிதானமாகவும் இந்த நேரத்தில் நாம் எமது சுமைகளையும்,கவலைகளையும் அல்லாஹ்வின் பால் பாரம் சாட்டி அவனிடம் மன ஆறுதலுக்காக பிரார்த்திப்பது மிகவும் பொறுத்தமானதாகும் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக அண்டைய நாடான .இந்தியாவைச் சேர்ந்தவர்களே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இந்த ஹாஜிகளுக்காகவும் துஆ செய்யுமாறும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தமது வேண்டுகோளின் போது குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

Powered by Blogger.