Header Ads



கலப்பு நீதிமன்றம் இல்லை, இலங்கைக்கு மிகப்பெரும் வெற்றி - அமெரிக்காவும் இணக்கம்

கலப்பு நீதிமன்றம் என்ற விடயம் ஜெனீவாவில் அமெரிக்கா சமர்ப்பித்துள்ள உத்தேச யோசனையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சமர்ப்பித்துள்ள உத்தேச தீர்மானத்தில், கலப்பு நீதிமன்ற பொறிமுறைமை குறித்து பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

இரண்டாவதாக திருத்தி அமைக்கப்பட்ட தீர்மானத்தில் இந்த விடயம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு நீதவான்களுடன் கூடிய கலப்பு நீதிமன்ற முறைமை ஒன்று உருவாக்கப்பட வேண்டுமென முன்னதாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

எனினும், தற்போது அந்த கலப்பு நீதிமன்றம் உள்ளக நீதிமன்ற விசாரணையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வெளிநாட்டு நீதவான்கள், பொதுநலவாய நாடுகள் நீதவான்கள், வெளிநாட்டு சட்டத்தரணிகள், அங்கீகரிக்கப்பட்ட விசாரணையாளர்களின் பங்களிப்பு அவசியமானது கூறப்பட்டுள்ளது.

எனினும் இந்த முறைமையானது கலப்பு நீதிமன்றமாக அமையாது என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு சட்டங்களுக்கு அமைய இந்த நீதுpமன்ற விசாரணை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, உள்நாட்டு சட்டங்களுக்கு அமைய விசாரணை நடத்தினால் சர்வதேச குற்றவியல் நிதிமன்றிலோ அல்லது வேறும் சர்வதேச ரீதியான நீதி வழங்கும் நிறுவனங்களின் முன்னிலையிலோ குற்றம் சுமத்தப்பட்டவர்களை நிறுத்த வேண்டிய அவசியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் சமர்ப்பிக்கப்பட்டுள்ள உத்தேச யோசனைக்கு இலங்கை ஆதரவளிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments

Powered by Blogger.