Header Ads



புதிய உடுநுவரையைக் கட்டியெழுப்ப, முன்வருமாறு யூஸுப் முப்தி அழைப்பு (படங்கள் இணைப்பு)


உடுநுவரை பிரதேசத்தில் கல்வி, கலாசாரம்,பொருளாதாரம், இளைஞர் விவகாரம் மற்றும் சகவாழ்வு என்பவற்றை மேம்படுத்துவதற்காக நீண்ட காலப் பணியை துவக்கி வைக்கும் ஒரு வரலாற்று நிகழ்வு கடந்த 20.09.2015 ஞாயிற்றுக் கிழமை Udunuwara Welfare Society இன் ஏற்பாட்டில் கெடம்ப,பேராதனை ஓக்ரே மண்டபத்தில் நடைபெற்றது.

அஷ்ஷெய்க் முப்தி யூஸுப் ஹனிபா அவர்களின் தலைமையில், PMM கம்பனியின் தலைவர் அல்ஹாஜ் எம். பஹ்மி மஹ்ரூப்  அவர்களின் அணுசரனையில் இந் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந் நிகழ்வில் Zஸம் Zஸம் பவுன்டேஷனின் தலைவரும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கொழும்புக் கிளை தலைவருமான அஷ்ஷெய்க் முப்தி யூஸுப் ஹனிபா விஷேட உரை நிகழ்த்தினார்.

உடுநுவரையின் முன்னேற்றத்திலும் அபிவிருத்தியிலும் நாம் கவலை கொள்வதோடு வேற்றுமைகளைக் களைந்து ஒற்றுமையுடன் புதிய உடுநுவரையைக் கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றுபட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

இந் நிகழ்வில் Rainnco நிறுவனத்தின் உரிமையாளர் அல்ஹாஜ் பவ்ஸ் அவர்களும்  கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.

உடுநுவரையிலுள்ள முஸ்லிம் பாடசாலைகளின் கல்வி நிலை தொடர்பாக மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.என் நஸார் உரையாற்றினார். உடுநுவரை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விஷேட காணொளி இங்கு  ஒளிபரப்பப்பட்டது. மேலும்  இப் பணியை முன்னெடுத்துச் செல்வதற்கான ஆலோசனைகள் சபையோரிடமிருந்து பெறப்பட்டதுடன் பாடசாலை மாணவர்களின் நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டன.

உடுநுவரை முஸ்லிம் சமூகத்தைப் பிரநிதித்துவப்படுத்தும் வகையில் சமூகத்தின் கல்விமான்கள், ஆசிரியர்கள், தொழிலதிபர்கள்,உலமாக்கள் என பல தரப்பினர் கலந்து கொண்டனர்.

உடுநுவரையிலுள்ள  பாடசாலைகளை மையப்படுத்தி கல்விப் பணிகள் முன்னெடுக்கப்படுவதோடு இளைஞர் அபிவிருத்தி, சகவாழ்வு போன்ற விடயங்களை மேப்படுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டு எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுக்க ஒரு குழு சபையோரால் நியமிக்கப்பட்டது. Uunuwara Development Trust (UDT) என்ற பெயரில் இவ்வமைப்பு பிரதான நிறைவேற்றுக் குழுவுடன் இணைந்து தமது பணிகளை முன்னெடுக்கும்.

இப் பணியை முன்னெடுப்பதற்குத் தேவையான நிறுவனத்தையும் அதற்கான நிலத்தையும் தனது தந்தையின் பெயரில் வக்பு செய்ய PMM கம்பனியின் தலைவர் அல்ஹாஜ் எம். பஹ்மி மஹ்ரூப் முன்வந்தார். இப் பணி வெற்றி பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கூடியிருந்த அனைவரினதும் முகத்தில் பிரகாசமாய்த் தெரிந்தது.


1 comment:

  1. Yusuf mufthi, welcome to your birth place udunuwara after spending many many years in bambalapitiya helping and guiding poor muslims.

    ReplyDelete

Powered by Blogger.