Header Ads



"இன்றைய உலகின், மிகப் பெரிய அச்சுறுத்தல்"

மத்திய கிழக்குப் பகுதியில் அமெரிக்காவின் கொள்கைகளை ஈரான் அதிபர் ஹஸன் ரெளஹானி கடுமையாகத் தாக்கினார்.

 ஐ.நா. பொதுக் குழுவில் கலந்து கொண்டு பேசியபோது அவர் அமெரிக்காவின் பாதுகாப்புத் துறைக் கொள்கைகளைக் கடுமையாக விமர்சித்தார்.

 ஈரானுக்கும் வல்லரசுகளுக்கும் இடையே ஏற்பட்ட அணுசக்தி உடன்படிக்கை, மேற்கு நாடுகளுடனான உறவில் புதிய சகாப்தத்தை ஏற்படுத்தும் என்று கூறிய அதே வேளையில், சவூதி, இஸ்ரேல் தொடர்பாக அமெரிக்காவின் கொள்கைகளைத் தாக்கிப் பேசினார்.

 பிரிவினையையும் பயங்கரவாதத்தையும் ஊக்குவிக்கும் சக்திகளுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

 சவூதி அரசுக்கும் அமெரிக்காவுக்கும் உள்ள நெருக்கத்தை அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.  அதிபர் ரெüஹானி பேசியதாவது:

 கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவுடன் இருந்து வரும் பகை உணர்வை முடிவுக்குக் கொண்டு வர ஈரான் தயாராக உள்ளது. கடந்த காலத்தை நாங்கள் மறக்க மாட்டோம். ஆனால் கடந்த காலத்திலேயே இருந்துவிட ஈரானுக்கு விருப்பமில்லை.

 ஈரானின் அணு ஆராய்ச்சி தொடர்பாக ஐந்து வல்லரசுகள் மற்றும் ஜெர்மனியுடன் கடந்த பல மாதங்களாக நடைபெற்று வந்த பேச்சின் முடிவில் கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட உடன்படிக்கை, மேற்கத்திய நாடுகளுடனான ஈரானின் உறவில் புதிய சகாப்தத்தை ஏற்படுத்தும்.

 ஆப்கானிஸ்தான், இராக் ஆகிய நாடுகளில் அமெரிக்கா படையெடுக்கவில்லை என்றால், இன்று பயங்கரவாதிகள் அங்கு நிகழ்த்தும் கொடூரச் செயல்களுக்கு நியாயம் கற்பிக்கும் நிலை தோன்றியிருக்காது.

 அதே போல, ஒடுக்கப்பட்ட பாலஸ்தீனர்களின் நலனுக்கு எதிராகச் செயல்படும் இஸ்ரேலுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் பயங்கரவாதம் வளர்வதற்கு இவை காரணம்.

 பயங்கரவாதக் குழுக்கள் பயங்கரவாத நாடுகளாக மாறி வருவதுதான் இன்றைய உலகின் மிகப் பெரிய அச்சுறுத்தல்.

 சிரியாவிலும் யேமனிலும் மக்களாட்சி அமைவதற்கு ஈரான் உதவத் தயாராக உள்ளது.
 ஆயுதங்களைப் பயன்படுத்தாமல், மக்கள் விருப்பத்தின் அடிப்படையில் அதிகாரத்தை அடைவதை ஈரான் ஆதரிக்கிறது.

 பயங்கரவாதத்துக்கும் வன்முறைக்கும் எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு ஒருங்கிணைந்த முன்னணியை உருவாக்க வேண்டும்.

 அதனை உருவாக்க மத்திய கிழக்குப் பகுதியில் உள்ள நாடுகளுக்கும் பிற உலக நாடுகளுக்கும் ஈரான் அழைப்பு விடுக்கிறது.

 பிராந்திய அளவில் ஏற்படும் பிரச்னைகளைக் களைவது, சிக்கல்களுக்குத் தீர்வு காண்பது, அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுப்பது, ஜனநாயக ரீதியிலான ஆட்சி முறையை உருவாக்குவது ஆகிய நடவடிக்கைகளை அந்த ஒருங்கிணைந்த முன்னணி மேற்கொள்ளும் என்று ரெüஹானி கூறினார்.

 ஐ.நா. கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர், அதிபர் ரௌஹானி வேறு நிகழ்ச்சிகளில் எதிலும் கலந்து கொள்ளாமல் உடனடியாக ஈரான் திரும்புவார் என்று ஐ.நா.வுக்கான அந்நாட்டின் தூதர் குலாமலி குஷ்ரு தெரிவித்தார்.

 பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ள முன்னதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் ஹஜ் நெரிசல் விபத்து விவகாரத்தினால், ஐ.நா. தொடர்பான நிகழ்ச்சிகளில் மட்டும் அதிபர் கலந்து கொள்கிறார் என்று குலாமலி குஷ்ரு கூறினார்.

1 comment:

  1. Killing Innocent public is WRONG... We agree . If what you said is ture,

    1. Why IRAN forces help ASSAD on ground in killing 200000 Siriyan sunnis ?
    2. Why IRAN support IRAQ by giving its forces and work with SHIA groups and allow attacking Sunni and killing them.
    3. Why IRAN trained HOOTHI group and ignited SHIA SUNNI problem in YEMEN?
    4. You play DRAMA showing the world you are against to US and ISRAEL... If so why so far you have never attacked ISREAL even by a single bullet so far.

    5. Why US is supporting you Neuclear project.
    6. Why you suppress Sunni Muslims of IRAN ? and killing their scholars?

    YOU May talk... But Your actions show your real face.

    ReplyDelete

Powered by Blogger.