இலங்கையில் முதல் தடவையாக, வரவுசெலவு காரியாலயம்
இலங்கையில் முதல் தடவையாக வரவுசெலவு காரியாலயமொன்று உருவாக்கப்படவுள்ளது.
வரவு செலவுத் திட்ட யோசனைகளை அமுல்படுத்தும் நோக்கில் இவ்வாறு வரவு செலவுத் திட்ட காரியாலயமென்று உருவாக்கப்பட உள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க வார இறுதிப் பத்திரிகை ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் 20ம் திகதி வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இம்முறை வரவு செலவுத் திட்டம் அனைத்து மக்களுக்கும் நிவாரணங்களை வழங்கக் கூடிய வகையில் அமையும்.
வரவு செலவுத் திட்ட அறிக்கையின் பரிந்துரைகள் யோசனைகளை அமுல்படுத்தும் நோக்கில் விசேட பட்ஜெட்(வரவுசெலவுத்திட்ட) காரியாலயமொன்று நிறுவப்பட உள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைய இவ்வாறு காரியாலயமொன்று நிறுவப்படவுள்ளது.
அவுஸ்திரேலியா, பிரித்தானியா போன்ற நாடுகளில் இவ்வாறு காரியாலயம் நிறுவப்படவுள்ளதாக ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

Post a Comment