Header Ads



கன்னத்தில் அறைந்ததற்காக 50 ஆயிரம் ரியால்களை இழப்பீடாக செலுத்தியவர்

சவுதி அரேபியாவில் செவிலியர் ஒருவர் கன்னத்தில் கிடைத்த அறைக்கு 50 ஆயிரம் ரியால்களை இழப்பீடாக பெற்றுள்ளார்.

சவுதியின் ஜஸான் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் செவிலியர் ஒருவர் பொலிசில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அந்த புகாரில், மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த நபர் ஒருவர், பலபேர் முன்னிலையில் எனது கன்னத்தில் அறைந்துவிட்டார் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் அளித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, பெண்ணை காயப்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் அந்நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

ஆனால், குற்றம் நிரூபணமாகிவிட்டால் தனக்கு இரண்டாண்டு சிறை கிடைக்கும் என்பதை உணர்ந்த அந்நபர், அப்பெண்ணுக்கு பணம் கொடுத்து சமரசம் செய்துகொள்வதாக கூறியுள்ளார்.

இதற்கு அந்தப் பெண்ணும் ஒப்புக்கொண்டதால் அடித்தவரிடம் இருந்து 50 ஆயிரம் ரியால்களை இழப்பீடாக பெற்றுகொண்டு வழக்கை வாபஸ் வாங்கிக் கொள்வதாக அவர் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.

No comments

Powered by Blogger.