364 பேருடன் சவூதிஅரேபியா பறந்த விமானம், இலங்கையில் அவசர தரையிறக்கம்
இந்தோனேசியா கருடா பயணிகள் எயார் லைன் விமானம், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது.
இந்தோனேசியா ஜகார்த்தாவில் இருந்து சவூதி அரேபியா ஜெத்தாவுக்கு 350 பயணிகள் மற்றும் 14 பயணியாட்களுடள் பயணித்துகொண்டிருந்த விமானமே இவ்வாறு தரையிறங்கியுள்ளது.
விமானத்துக்குள் விளையாடிக்கொண்டிருந்த மூன்று வயது சிறுமி, காயமடைந்ததையடுத்தே அவ்விமானம் அவசரமாக தரையிறங்கியது.

Post a Comment