Header Ads



25 அடி தூரம் கடலுக்குள் சென்றுள்ள காத்தான்குடி (படங்கள்)

(பழுலுல்லாஹ் பர்ஹான்)


மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி- ஏத்துக்கால் கடற்கரையில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பு காரணமாக அப்பகுதியில் மலசலகூடம் அமைப்பதற்காக இடப்பட்டிருந்த அத்திவாரம் நேற்று 29 செவ்வாய்க்கிழமை இரவு உடைந்துள்ளது.

மீனவர் தங்குமிடக் கட்டிடத்துடன் மலசலகூடம் அமைப்பதற்காக இடப்பட்டிருந்த அத்திவாரமே இவ்வாறு உடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இக் கடற்கரையில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்புக் காரணமாக சுமார்; 25 அடி தூரம் கடலுக்குள் சென்றுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

கடல் அரிப்பினால் சேதமடைந்துள்ள கட்டிடத்தை பார்வையிட அதிகமான மக்கள் வருகை தந்த வண்ணமுள்ளனர்.




4 comments:

  1. 25 அடி தூரம் கடலுக்குள் காத்தான்குடி செல்லவில்லை, மாறாக
    25 அடி தூரம் கடல்தான் காத்தான்குடிக்குள் வந்துள்ளது.

    ReplyDelete
  2. காத்தான்குடியை பொருத்தவரை சனத்தொகையில் மிகவும் அடர்த்தியான ஒரு பிரதேசமாகும் .எனவே இங்கு கடலோர அணைக்கட்டு பாதுகாப்பு மிகவும் அவசியமான ஒன்றாகும் .இது விடயத்தில் இப்பிரதேச அரசியல்வாதிகள் துரித நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் .

    ReplyDelete
  3. கடலுக்கு சொந்தமான காணியை அதனை ஆக்கிரமிதவர்களிடம் இருந்த திரும்ப பெற்றால் அதுக்கு பெயர் ஊருக்குள்ள கடல் வந்துட்டு .......
    குடுத்ததை கேட்டால் பகை என்று சும்மாவா சொன்னாங்க

    ReplyDelete
  4. ANWAR MOHAMED இப்படி எழுத ரூம் போட்டு யோசிப்பிங்களோ.நெத்தியடி.இவ்வாறு யதார்த்தமாக திடிரன்று யோசிக்கும் திறமைசாலிகள் நம் சமுதாயத்துக்கு தேவை பாராட்டுக்கள்.

    ReplyDelete

Powered by Blogger.