Header Ads



தேசிய அரசாங்கத்தை ஏற்று UNP யின் வாலாக செயற்பட நாங்கள் தயாரில்லை - விமல் வீரவன்ச

தனது கட்சி தேசிய அரசாங்கத்தை ஏற்றுக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் வாலாக செயற்படுவதன் மூலம் பெரிய காட்டிக் கொடுப்பை மேற்கொள்வதற்கு தயாராக இல்லை என தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கம் ஒன்றை கட்டியெழுப்புவது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சுதந்திர கட்சி தலைவர்களுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இரகசிய பேச்சாவார்த்தை தொடர்பில் தனது நிலைப்பாட்டை விமலின் இணையதளம் ஊடாக வெளிபடுத்தியிருந்தார்.

அவர் தொடர்ந்து குறிப்பிட்டிருந்ததாவது,

பொது தேர்தலின் போது ஜனாதிபதி மேற்கொள்ளப்பட்ட இடையூர்கள் மேற்கொள்ளாதிருந்திருந்தால் ஐக்கிய தேசிய கட்சியை விடவும் முன்னணி அதிக ஆசனங்களை பெற்றிருக்கும்.

இதேவேளை கண்டி, கொழும்பு, கம்பஹா மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களின் தேர்தல் முடிகளில் சில இயற்கைக்கு மாறாக காணப்பட்டதாகவும், அதனை ஆய்வு செய்து வருவதாகவும் குறிப்பிட்ட விமல் முன்னரே ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததனை போன்ற முடிவுகள் சில மாவட்டங்களில் காண முடிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எப்படியிருப்பினும் 95 ஆசனங்களுடன் வலுவான எதிர்க்கட்சியாக செயற்படுவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் வாலாக செயற்படுவதன் மூலம் பெரிய காட்டிக் கொடுப்பை மேற்கொள்வதற்கு தயாராக இல்லை. பல வருட காலங்களின் பின்னர் எதிர்க்கட்சி இவ்வளவு வலுவான நிலையில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கம் நல்லதொன்றை செய்யுமாயின் அதற்கு ஆதரவு வழங்கும் எதிர்க்கட்சியாக செயற்படுவோம் என அவர் தெரிவித்துள்ளார். விமல் வீரவன்ச உட்பட தேசிய சுதந்திர முன்னணி பிரதிநிதிகள் 06 பேர் இம்முறை முன்னணியின் கீழ் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

3 comments:

  1. You are the big hora..as Chandrika told...even we dont need your support punky... do sleep in Parliment and who were selected you they are innocent..they dont know about you fully...
    I saw last night one vedio about you..you went to Jaffna for a opening ceremany and I can see how you are behaving your body guards and officers...offf...more than a dog...then how you will do good for people.....better they put yu in jail forever...idiot

    ReplyDelete
  2. Singala makal inavathigal 50% irkkirargal aduthan pandi naai ellam Parliament anuppukiraargal

    ReplyDelete
  3. திருட்டுப்பயல் ஊழல் பெருச்சாலி யோக்கியம் பேசுது

    ReplyDelete

Powered by Blogger.