Header Ads



சிரியா, ஈராக், ஆப்கன் அகதிகள் எல்லையில் விரட்டியடிக்கப்படும் பரிதாபம்

மேற்கு ஆசிய பகுதியில் உள்ள அரபு நாடு சிரியா. வளமான நிலங்கள், உயரமான மலைகள், பாலைவனங்கள் உள்ள நாடு.

 அரேபியர்கள் அதிகம் வசிக்கின்றனர். கிரேக்கர்கள், ஆர்மேனியர்கள், குர்து இனத்தவர், கிறிஸ்தவர்கள் என பல தரப்பினரும் அங்கு உள்ளனர். அதிபர் பஷார்  அல்-ஆசாத் ஆட்சிக்கு எதிராக, சிரியா புரட்சி என்ற பெயரில் கடந்த 2011ம் ஆண்டு ஒரு பிரிவினர் போராட்டத்தில் குதித்தனர். அரசுக்கு எதிராக போராட்டத்தை  தீவிரபடுத்தினர். சிரியா ராணுவமும் போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மீது சரமாரியாக தாக்குல் நடத்தியது. ரசாயண  ஆயதங்களும் பயன்படுத்தப்பட்டன. இதன் விளைவு கடந்த ஏப்ரல் மாதம் வரை 3 லட்சத்து 10 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். ராணுவ தாக்குதலில்  அப்பாவி மக்கள், குழந்தைகள் பலியாவதற்கு பலதரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். 

எங்கும் குண்டு சத்தம், வேலை இல்லை, சாப்பாட்டுக்கு வழியும் இல்லை. இதே நிலைதான் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானிலும் நீடிக்கிறது.  இங்குள்ள மக்கள் சொந்த நாட்டில் உள்ள சொத்துக்களை விற்றுவிட்டு விட்டு, பிழைப்பு தேடி வளமான ஐரோப்பிய நாடுகளுக்கு படையெடுக்க  தொடங்கியுள்ளனர். கப்பல், படகுகள் மூலம் கிரீஸ் நாட்டுக்கு வரும் அகதிகள் அங்கிருந்து ரயில், பஸ்களில் பயணம் செய்து மாசடோனியா  எல்லைக்கு வருகின்றனர். மாசடோனியாவிலிருந்து, செர்பியா, ஹங்கேரி வழியாக ஜெர்மனிக்கு சென்று குடியேறுவதுதான் பெரும்பாலானோர்களின்  இலக்காக உள்ளது. 

ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பில் உள்ள ஹங்கேரி சென்று விட்டால் அங்கிருந்து இங்கிலாந்து, அயர்லாந்து தவிர மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு  பாஸ்போர்ட் இல்லாமல் செல்லும் விதிமுறை உள்ளது. இதனால் கிரீஸ், மாசடோனியா, செர்பியா வழியாக ஹங்கேரிக்கு அகதிகள் அதிக அளவில்  வருகின்றனர். இந்தாண்டில் இதுவரை 1 லட்சத்து 60 ஆயிரம் அகதிகள் கிரீஸ் நாட்டுக்கு வந்துள்ளனர். கடந்த மாதத்தில் மட்டும் 50 ஆயிரம் பேர்  வந்துள்ளனர். அங்கிருந்து பஸ், ரயில்கள் மூலம் மாசடோனியா எல்லைக்கு செல்கின்றனர். ஒரு நாளைக்கு 3 ஆயிரம் அகதிகள் நுழைவதால்,  அவசர  நிலை அறிவித்து அவர்களை தடுக்கும் முயற்சியில் இறங்கியது மாசடோனியா அரசு. எல்லையில் முள் கம்பிகள், போலீஸ் பாதுகாப்பை  ஆகியவற்றையும் மீறி அகதிகள் நுழைய தொடங்கினர். 

லத்தி சார்ஜ், கண்ணீர் புகை குண்டு வீச்சு எதுவும் பலனளிக்கவில்லை. அரைவயிறு உணவுடன், கொளுத்தும் வெயிலில் வயல்வெளிகளை கடந்து,  தண்டவாளத்தில் படுத்து தூங்கி குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் முதியவர்கள்  நாடுவிட்டு நாடு கடந்து செல்கின்றனர். பலர் வழியில்  மயங்கி விழுகின்றனர். தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், செஞ்சிலுவை சங்கத்தினரும் ஆங்காங்கே இவர்களுக்கு உதவி வருகின்றனர். 

மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளும்படி ஐ.்நா. அகதிகள் அமைப்பு வேண்டுகோள் விடுத்ததையடுத்து தற்போது எல்லையை திறந்து விட்டுள்ளது  மாசடோனியா. அகதிகள் பஸ், ரயிலில் ஏறி செர்பியா எல்லை நோக்கி செல்கின்றனர். 

அதிகளவிலான அகதிகள் ஹங்கேரிக்குள் நுழைவதை தடுக்க அந்நாட்டு அரசு எல்லையில் 175 கி.மீ தூரத்துக்கு 13 அடி உயர தகடுகளால் எல்லை  அமைத்து வருகிறது. இரண்டாம் உலகப்போருக்குப் பின் தற்போதுதான், ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகள் அதிகளவில் செல்கின்றனர்.

1 comment:

  1. The evidence for ASAD and Hisbullah connection.

    http://www.aljazeera.com/news/2015/08/assad-defends-presence-hezbollah-fighters-syria-150825203254106.html

    ReplyDelete

Powered by Blogger.