Header Ads



புதிய பாராளுமன்றத்தில் பல்வேறு, குடும்ப உறவுகள் (விபரம் இணைப்பு)

உறவு முறையை கொண்ட ஏராளமான வேட்பாளர்கள் இந்த முறையும் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

இந்த தரப்பினரிடையே, தந்தை, மகன், சகோதரர்கள், மனைவிமார் மற்றும் உறவுக்கார சகோதரர்கள் அடங்குகின்றமை சிறப்பு அம்சமாகும்.

குருநாகல் மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனான நாமல் ராஜபக்ச,

அமைச்சர் ராஜித்த சேனராத்னவின் புதல்வரான சத்துர சேனாரத்ன,

சப்ரகமுவ முதலமைச்சர் மஹீபால ஹேரத்தின் மகனான கனக ஹேரத்,

முன்னாள் பிரதியமைச்சர் எச்.ஆர் மித்ரபாலவின் மகனான துஸ்மன்த மித்ரபால,

தென் மாகாண அமைச்சர் டீ.வீ உபுலின் புதல்வரான டீ.வீ. சானக ஆகியோர் இந்த குழுவில் அடங்குகின்றனர்.

அத்துடன் முன்னாள் பிரதமர் டி.எம் ஜயரத்னவின் புதல்வரான அநுராத ஜயரத்ன கண்டி மாவட்டத்தில் இருந்து இந்த முறை நாடாளுமன்றத்திற்கு தெரிவானார்.

முன்னாள் அமைச்சர் மகிந்த விஜேசேகரவின் புதல்வரான காஞ்சன விஜேசேகர மாத்தறை மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவானார்.

முன்னாள் அமைச்சரான ஜகத் பாலசூரியவின் மகனான தாரக பாலசூரிய கேகாலை மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.

கூட்டமைப்பின் தேசிய பட்டியல் வேட்பாளர் ஜீவன் குமாரதுங்கவின் புதல்வியான மல்ஷா குமாரதுங்க தேர்தலில் போட்டியிட்டதுடன் அவர் வெற்றி பெறவில்லை.

முன்னாள் அமைச்சர் எஸ்.பீ திசாநாயக்க இந்த முறை கூட்டமைப்பில் போட்டியிட்டு தோல்வியடைந்ததுடன் அவரது புதல்வரும் தேர்தலில் தோல்வியடைந்துள்ளார்.

அநுராதபுரத்தில் இருந்து இந்த முறை நாடாளுமன்றத்திற்கு தெரிவான அமைச்சர் துமிந்த திசாநாயக்க, வட மத்திய முன்னாள் முதலமைச்சரான பேர்டி பிரேமலால் திசாநாயக்கவின் புதல்வராவார்.

No comments

Powered by Blogger.