Header Ads



"பொது பலசேனாவுடன் சேர்ந்து, இனவாதமும் தோற்றுப் போனது"

இலங்கையின் எட்டாவது பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டன. ரனில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி 106 ஆசனங்களுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. ரனில் விக்கிரமசிங்க அவர்கள் மீண்டும் பிரதமராக பதவியேற்றுக் கொள்கின்றார்.

இந்நிலையில் இலங்கை வரலாற்றில் பாரிய எதிர்பார்பை உண்டாக்கிய ஒரு தேர்தலாக 08வது பாராளுமன்றத் தேர்தல் அமைந்திருந்தது. ஜனாதிபதித் தேர்தலை விடவும் பாராளுமன்றத் தேர்தல் மிக முக்கியமாக பார்க்கப் பட்டது என்றால் அது மிகையல்ல.

முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இத் தேர்தலின் பின்னர் பிரதமர் ஆசனத்தை பெற்றுக் கொள்ளும் அதீத ஆசையில் குருநாகல் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளராக களமிறங்கினார்.

இதே நேரத்தில் பாராளுமன்றத்தில் கூடிய பலத்துடனான ஆட்சியமைக்கும் எண்ணத்தில் ஐக்கிய தேசிய கட்சி சிறுபான்மைக் கட்சிகளை இணைத்துக் கொண்டு களமிறங்கியது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றி பெற்றாலும் மஹிந்த ராஜபக்ஷ தவிர்ந்த ஒருவருக்கே பிரதமர் பதவி வழங்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்கள் அறிவித்ததும், கூட்டமைப்பின் பொதுச் செயலளாளர் சுசில் பிரேம் ஜயந்த மற்றும் சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் அநுர பிரியதர்சன யாப்பா ஆகியோரை பொறுப்புகளிலிருந்து அதிரடியாக நீக்கியமையும் இத்தேர்தல் தொடர்பில் இன்னும் அதிகமாக எதிர்பார்பை மக்கள் மத்தியில் உண்டாக்கியது எனலாம்.

எல்லாவற்றையும் தாண்டி, 08வது பாராளுமன்றத் தேர்தல் என்பது பகிரங்க இனவாதிகள் போட்டியிட்ட மிக முக்கிய தேர்தலாக அமைந்தது.

இலங்கை வாழ் சிறுபான்மையின முஸ்லிம்களுக்கு எதிராக முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சிக் காலத்தில் பகிரங்கமாக இனவாதம் பேசி, பள்ளிவாயல்கள் மீது தாக்குதல் நடத்தி, முஸ்லிம் பெண்களின் இஸ்லாமிய ஆடை முறை, முஸ்லிம் பாடசாலைகள், ஹழால் போன்றவற்று எதிராக பிரச்சாரம் செய்து, முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்களுக்கு வித்திட்ட தீவிரவாத இயக்கமான பொது பல சேனா – பொது ஜன பெரமுன (BJP) என்ற கட்சி நாமத்தில் இத்தேர்தலில் போட்டியிட்டது.

இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி, முஸ்லிம்களை கொலை செய்து, இன்றும் இனவாதம் பேசி வரும் இந்தியாவை ஆளும் மத்திய அரசான பாரதீய ஜனதா கட்சி (BJP) யின் பெயரை ஒத்ததாக தனது பெயரையும் அமைத்துக் கொண்டு இந்தியாவில் இனவாதத்தினூடாக மோடி ஆட்சியமைத்ததைப் போல் தாங்களும் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற கனவு, தீராத ஆசை என்பவற்றுடனேயே இத்தேர்தலில் பொது பல சேனா போட்டியிட்டது.

குடும்பத்திற்கு ஒரு வாக்கு

ஒரு குடும்பத்தில் ஒரு வாக்கை பொது பல சேனாவுக்கு வழங்குங்கள். சிங்களவர்களை காப்பாற்ற BJP க்கு வாக்களியுங்கள். உலகில் உள்ள ஒரே பௌத்த நாடான இலங்கையை அச்சுறுத்தும் முஸ்லிம்களிடமிருந்து பௌத்தர்களை மீட்டெடுக்க BJP க்கு சிங்களவர்கள் வாக்களிக்க வேண்டும் என்ற கோஷத்துடம் களம் இறங்கிய பொது பல சேனா வரலாற்று ரீதியில் எந்தக் கட்சியும் பெற்றுக் கொள்ளாத அவமானத்தை பெற்றுள்ளது.

முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத பிரச்சாரத்தினை தூண்டி விட்டு அதன் மூலம் அளுத்கமை, பேருவலை மற்றும் தர்கா நகர் உள்ளிட்ட பகுதிகளில் பெரும் கலவரத்திற்கு வித்திட்ட பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் களுத்தரை மாவட்டத்தில் போட்டியிட்டார்.

இதே நேரத்தில் பொது பல சேனாவின் நிறைவேற்று பணிப்பாளர் டிலந்த விதானகே கம்பஹாவிலும், தேசிய அமைப்பாளர் நந்த தேரர் கொழும்பு மாவட்டத்திலும் போட்டியிட்டதுடன் மொத்தம் 16 மாவட்டங்களில் BJP போட்டியிட்டது.

16 மாவட்டங்களிலும் படு தோழ்வி.

பொது ஜன பெரமுன (BJP) என்ற தமது கட்சியினூடாக பொது பல சேனா 16 மாவட்டங்களில் தமது வேட்பாளர்களை நிறுத்தியது. அனைத்து இடங்களிலும் கட்டுப் பணம் கூட கிடைக்காத நிலையில் படு கேவலமான தோழ்வியொன்றினையே பல சேனா பெற்றுக் கொண்டது.

பொது பல சேனாவின் – பொது ஜன பெரமுன (BJP) பெற்றுக் கொண்ட வாக்குகள் விபரம்

01. குருநாகல் மாவட்டம் – 788 (தபால் மூலம் 87 வாக்குகள்) 02. மாத்தளை மாவட்டம் – 402 (தபால் மூலம் 48 வாக்குகள்) 03. பதுளை மாவட்டம் – 688 (தபால் மூலம் 55 வாக்குகள்) 04. கொழும்பு மாவட்டம் – 2137 (தபால் மூலம் 54 வாக்குகள்) 05. களுத்துறை மாவட்டம் – 5727 (தபால் மூலம் 131 வாக்குகள்) 06. கம்பஹா மாவட்டம் – 1664 (தபால் மூலம் 75 வாக்குகள் 07. காலி மாவட்டம் – 3041 (தபால் மூலம் 138 வாக்குகள்)
 
 08. ஹம்பாந்தோட்டை மாவட்டம் – 419 (தபால் மூலம் 29 வாக்குகள்) 09. கேகாலை மாவட்டம் – 1530 (தபால் மூலம் 110 வாக்குகள்) 10. பொலன்னறுவை மாவட்டம் – 160 (தபால் மூலம் 21 வாக்குகள்) 11. கண்டி மாவட்டம் – 136 (தபால் மூலம் மாத்திரம்) 12. நுவரெலியா மாவட்டம் – 32 (தபால் மூலம் மாத்திரம்) 13. புத்தளம் மாவட்டம் – 18 (தபால் மூலம் மாத்திரம்) 14. அனுராதபுர மாவட்டம் – 30 (தபால் மூலம் மாத்திரம்) 15. இரத்தினபுரி மாவட்டம் – 33 (தபால் மூலம் மாத்திரம்) 16. திகாமடுல்ல மாவட்டம் – 64 (தபால் மூலம் – இல்லை)

பொது பல சேனாவின் பொதுச் செயலாளரும் அளுத்கமை பகுதி முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தின் சூஸ்திரதாரியுமான ஞானசார தேரர் போட்டியிட்ட களுத்துறை மாவட்டத்தில் அவர் மொத்தமாக பெற்றுக் கொண்ட வாக்குகள் 5727 மாத்திரமே.

அதே போல் பொது பல சேனாவின் நிறைவேற்றுப் பணிப்பாளரான டிலந்த விதானகே கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டு 1664 வாக்குகளையும், கொழும்பில் போட்டியிட்ட தேசிய அமைப்பாளர் நந்த தேரர் 2137 வாக்குகளையுமே பெற்றுக் கொண்டார்கள்.

பொது பல சேனாவின் இனவாத செயல்பாடுகளில் மிக முக்கிய இடமாக கருதப்பட்ட களுத்துறை மாவட்டத்தில் அவர்கள் பெற்றுக் கொண்ட வாக்குகள் மற்றும் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் அவர்கள் பெற்றுக் கொண்ட வாக்கு வீதங்களைப் பார்க்கும் போது, பொது பல சேனாவின் அரசியல் கட்சி (BJP) மாத்திரம் அல்ல இனவாதமும் சேர்ந்தே தோழ்வியடைந்துள்ளதை நாம் தெளிவாக உணர முடிகின்றது.


பெரும்பான்மை சிங்கள மக்களால் புறக்கணிக்கப்பட்ட - BJP

பொது பல சேனாவின் அரசியல் கட்சியான BJP போட்டியிட்ட இடங்களில் மிக முக்கியமாக, பௌத்த மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இவர்களுடைய கட்சி முகவரி அற்றுக் போயுள்ளதை நாம் அவதானிக்க முடிகின்றது.

பௌத்த மதத்தின் கேந்திர நிலையமாக அமையப் பெற்றுள்ள அநுராதபுரம் மாவட்டத்தில் இவர்கள் பெற்றுக் கொண்ட மொத்த வாக்குகள் 30 மாத்திரமே.

அதே போல் பௌத்த மதத்தின் இன்னொரு கேந்திர நிலையமாக அமையப் பெற்றுள்ள கண்டி மாவட்டத்தில் 136 வாக்குகளை மாத்திரமே இவர்களினால் பெற முடிந்தது.

அதே போல் பொலன்னறுவை மாவட்டத்திலும் 160 வாக்குளை மாத்திரமே BJP யினால் பெற்றுக் கொள்ள முடிந்தது.

மாவனல்லை, தெவனகல பிரச்சினையை உண்டாக்கி அங்கிருந்து முஸ்லிம்களை வெளியேற்ற வேண்டும் என்ற பிரச்சாரத்தை தூண்டிய பொது பல சேனா மாவனல்லை உள்ளிட்ட கேகாலை மாவட்டத்தில் பெற்றுக் கொண்ட மொத்த வாக்குகள் 1530 மாத்திரமே.

பொது பல சேனாவின் இனவாத பிரச்சாரத்தின் ஊற்றுக் கண்களின் ஒன்றாக கருதப்பட்ட பதுலை மாவட்டத்தில் BJP பெற்றுக் கொண்ட மொத்த வாக்குகள் 688 ஆகும்.

சிங்கள பெரும்பான்மை மக்களை அதிகமாக கொண்ட காலி மாவட்டத்தில் மொத்தமாக 3041 வாக்குகள் மாத்திரமே இவர்களினால் பெற முடிந்துள்ளது.

பொது பல சேனாவின் இனவாத செயல்பாடுகளுக்கு அடித்தளமாக அமையும் என்று அவர்களினால் எதிர்பார்க்கப்பட்ட குருநாகல் மாவட்டத்தில் BJP மொத்தமாக 788 வாக்குளையே பெற்றுக் கொண்டுள்ளது.

புரிந்துணர்வுள்ள பௌத்த மக்கள்

நாடு முழுவதும் BJP கட்சியூடாக பொது பல சேனா இனவாத பிரச்சாரத்தை முன்னெடுத்தும், பௌத்த மதத்தையும், சிங்கள மக்களையும் தமது கட்சியால் மாத்திரம் தான் காப்பாற்ற முடியும் என்று கொக்கரித்தும் இவர்களினால் ஒரு மாவட்டத்தில் கூட பத்தாயிரம் வாக்குகளைக் கூட பெற முடியவில்லை. நாடு முழுவதும் 16 மாவட்டங்களிலும் வெறும் இருபதாயிரம் வாக்குகள் அளவுக்குத் தான் இவர்களினால் பெற்றுக் கொள்ள முடிந்தது. ஒரு பாராளுமன்ற உறுப்பினர்களைக் கூட பெற்றுக் கொள்ள முடியாத அளவுக்குத் தான் இவர்களுக்கு மக்கள் அங்கீகாரம் உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பௌத்த மக்களைப் பொறுத்த வரையில் முஸ்லிம்களுடன் நெகிழ்ச்சியாக பழகக் கூடியவர்கள். அன்பாக நடக்கக் கூடியவர்கள். பண்பாக வாழக் கூடியவர்கள். இனவாதத்தைத் தூண்டி விட்டு முஸ்லிம் சிங்கள கலவரங்கள் மூலம் அரசியல் இலாபம் அடையளாம் என்று ஆசைப்பட்டு, பாராளுமன்றக் கனவில் மிதந்தவர்களுக்கு அவமானமே மிஞ்சியது.

இறைவனின் வேதத்தை இழிவு படுத்த நினைத்த எவனும் இவ்வுலகில் இழிவுறாமல், இகழப்படாமல் இருந்ததில்லை என்பதற்கு பொது பல சேனாவும், அவர்களின் அரசியல் பிரிவும் ஓர் நிகழ் கால சாட்சியாகும்.

6 comments:

  1. நீங்கள் (SLTJ) கொஞ்சம் அடக்கி வாசிக்கவும்.புத்தர் மனித மாமிசம் சாப்பிட்டார் எண்டு சொல்லி அடுத்த மதத்தினரை இழுவு படுத்தி நீதிமன்றதில் வழக்கு வாபஸ்பெறப்பட்ட விஷயம் எல்லாம் ஜபாகம் இருக்கிறதா ? அத விடுங்க
    நீங்கள் எதை தான் இழிவு படுத்தாமல் விட்டு வைத்தீர்கள்?தோலோடு தோல் இருத்து தொழுவும் சகோதரர்களையும்,இலங்கையில் உங்கள் கருத்துக்களுக்கு (கொல்ஹைக்கு) மாற்று கருத்துடைய உலமக்கலயும்,இமாம்களையும் ஏன் சஹாபாக்களை கூட துச்சமாக பேசியும் எழுதியும் ,ஒவ்வொரு வருடத்துக்கு ஒவ்வொரு சட்டம் அதுவும் இந்தியவில் தமிழ் நாட்டில் சொன்னால்,என்ற போக்கும்,பித்அத்தை அழிக்கிறோம் அல்லது சுன்னத்தை செய்கிறோம் என்ற பெயரில் 100 மீட்டருக்கு ஒரு புதிய பள்ளிவாயல்கள் திறத்து முஸ்லிம் சமுதாயத்தை கூறு போட்ட்டு பிரித்து எல்லாம்தான் இனவாதம்.

    ReplyDelete
  2. BBS இத்தோ்தலில் தோல்வியுற்றமை நமக்கு நின்மதியைத் தந்தாலும்(அல் ஹம்துலில்லாஹ்) நாம் எப்போதும் அவதானமாகவே இருக்க வேண்டும். ஏனெனில் ஞானசார " இத்தோ்தலால் தமது கட்சிக்கு ஓா் அறிமுகம் கிடைத்ததாக கூறியது" கருத்திற்கொள்ளப்படவேண்டிதாகும்.இறைவனே போதுமானவன்

    ReplyDelete
  3. Well said Mini Minhaj. Every Muslim will have to be moderate, decent and appealing in their comments on Muslims and Non Muslims too. IT IS BETTER AND PRUDENT TO REFRAIN FROM COMMENTING ON BBS at the moment.

    ReplyDelete
  4. Well said minhaj,

    We can't overly confident of these numbers, JVP managed to get over 30 seats in the 2004 elections when it contested together with UPFA, but alone they could't get not even 10 seats in other elections. which means, although people do not want to vote for JVP they would vote for its candidates, same true for Wimal contesting under NFF and UPFA in Colombo. like wise, if those BJP/BBS candidate contest together with UPFA or any other mainstream political party they will mark much different result than this.

    Sorry to mention this, Rauff Hakeem scoring 100k plus pref.votes in Kandy is also possible only if he contest under UNP ticket.

    ReplyDelete
  5. YesMafaz, your Calculation is correct ,we need to think in future about this BBS if joint what will napped.May Allha will Protect our community Aameen

    ReplyDelete

Powered by Blogger.