Header Ads



வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரக சேவையில் துரிதமான மறுசீரமைப்பு - அமைச்சர் மங்கள

புதிய அரசாங்கத்தின் கீழ் வர்த்தகம், சுற்றுலா, முதலீட்டு ஊக்குவிப்பு போன்றவற்றை மையமாக கொண்ட ராஜதந்திர பொருளாதார கொள்கையை, இலங்கை வெளிநாட்டு சேவைக்கு அறிமுகப்படுத்த போவதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

100 நாள் வேலைத்திட்ட அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சராக பதவியேற்ற மங்கள சமரவீர, புதிய அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சராக இன்று மீண்டும் பதவியேற்றுக்கொண்டார்.
அமைச்சில் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட போதே இதனை கூறியுள்ளார்.

எதிர்வரும் காலத்தில் வெளிவிவகார அமைச்சிலும் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரக சேவையிலும் துரிதமான மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனவரி 8 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட புரட்சியின் காரணமாக சர்வதேச சமூகம் இலங்கைக்கு வழங்கியுள்ள பாரிய புகழை மேலும் கட்டியெழுப்ப சர்வதேசத்துடனான தொடர்புகளை வலுப்படுத்த தேவையான நிலையான அரசியல் பலத்தை மக்கள் இம்முறை தேர்தலில் வழங்கியுள்ளமை தெளிவாகியுள்ளது எனவும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

பொதுத் தேர்தலில் மாத்தறை மாவட்டத்தில் இரண்டாவது அதிக விருப்பு வாக்குகளை பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவாக மங்கள சமரவீர, மூன்றாவது முறையாக வெளிவிவகார அமைச்சர் பதவியை ஏற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. வாழ்த்துக்கள்.யாருக்கு என்ன நடந்தாலும் தயவு செய்து மஹிந்த கூட்டத்தின் கள்ளப்பனத்தை உடனடியாக இலங்கைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.