ஹிஸ்புல்லாவுக்கு காத்தான்குடியில் வரவேற்பு
2015 பாராளுமன்ற பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மாவட்ட முதன்மை வேட்பாளராக போட்டியிட்டு சுமார் 54 வாக்குகளால் தோல்வியடைந்த முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் சொந்த ஊரான காத்தான்குடி பிரதேசத்தில் மட்டக்களப்பு கல்முனை காத்தான்குடி பிரதான வீதியில் 21 இன்று வெள்ளிக்கிழமை மாலை பாரியளவில் மக்கள் மகிழ்ச்சி களிப்பில் ஈடுபட்டதோடு ஹிஸ்புல்லாஹ்வின் பதாதைகளை ஏந்தி ஊர்வலமாகவும் சென்றதோடு பட்டாசு கொழுத்தி ஆராவரம் செய்தனர்.
இம் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் இளைஞர்கள்,சிறுவர்கள்,பெரியவர்கள் உட்பட பெரும் திரளான பொது மக்கள் கலந்து கொண்டனர்.
இதனால் சிறிது நேரம் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்துடன் பொலிசாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அல்லாஹ் மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்து இருக்கான்.இனியாவது நேர்மையாக சமுதாயத்துக்கு சேவை செய்தால் மறுமுறையும் வர முடியும் ஒரு சோதனையில் இருந்து தப்பிப்புலத்து இருக்கார்
ReplyDeleteமகிந்தவின் அடிவருடிகளில் ஒருவனும், பொதுச் சொத்தை சுருட்டி ஏப்பமிட்டவனும், அடாவடித்தனம் செய்வதில் பேர்போனவனுமான முஸ்லிம் சமுகத்தின் பகிரங்க துரோகியை பாராளுமன்றத்திற்குள் உள்வாங்கி இருப்பதானது கிழக்கு மாகாண மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் பெரும்பாலான மக்களிடத்தில் தற்போதைய நல்லாட்சியின் நடவடிக்கைகள் மீது எதிரலையை தோற்றுவித்துள்ளது என்பது தான் உண்மை. ஒரு சமுகத் துரோகியை உள்வாங்கி இருப்பதன் மூலம் நடப்பு நல்லாட்சி அரசாங்கம் என்ன சாதிக்க நினைக்கின்றது? தேசியப் பட்டியலில் தெரிவு செய்யப்பட்ட செய்தி வந்தது முதல் அடாவடித்தனம் அரங்கேறத் தொடங்கிவிட்டது. ஜனாதிபதி இதனை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்காது போனால், சிறுதுளி பெரு வெள்ளமாகி ஹிஸ்புல்லாவின் மீதுள்ள வெறுப்பு காலப்போக்கில் நடப்பு அரசாங்கத்திற்கு அனுகூல மில்லாத நிலையையே தோற்றுவிக்கும்.?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஹிபுல்லாஹ் அரசியலில் ஆரம்பித்ததில் இருந்து இன்று வரைக்கும் சத்தியத்துக்கு சவாலாகவே இருந்துள்ளார். இவருக்கு தேசியப்பட்டியல் எம்பி கிடைத்தது முஸ்லிம்களின் ஒற்றுமையை பிரித்தால்வதட்காகவே. நிட்சயமாக அதை நிறைவேற்றுவார் என்பது அவரது கடந்த கால வரலாறு சான்று பகரும்.
ReplyDeleteCome on " padayappa". we salute you. welcome you and congratulate you. we know you will do your best for our village for sure. Always support you and for sure you always deliver us. May Allah give you long life.
ReplyDeleteBritish kaararkal kaiyanda "Devide and Rule System" in adippadayilana munneduppe ivvaaraana pachchonthikalai meendum niyamiththu samooha ottumaiyai seerkulaippathaahum abdul rahman ponra thoora nokkudaiya sinthanaiyalarkal ivvaaraana nayavanchakarkalaal pinthallappadukinranar allah pothumanavan
ReplyDelete