ரவூப் ஹக்கீமுக்கு இக்கட்டான நிலை..?
(அலி)
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலைத்தொடர்ந்து முஸ்லீம் காங்கிரசிற்கு இரண்டே இரண்டு தேசியப்பட்டியல்கள் கிடைக்கப் பெற்றிருக்கின்றன.உடனடியாக பெயர்களை நியமிக்க வேண்டும் என்பதற்காக ஹகீம் தனக்கு விசுவாசமான, எந்தநேரத்திலும் பணிவுடன் நடக்கக்கூடிய இருவரை நியமித்துவிட்டார்.
இதன் ஆழம் புரியாத சிலர் ஹகீம் அம்பாறைக்கு துரோகம் செய்துவிட்டார், அது இது என்று என கூப்பாடு போட்டுகொண்டு திரிகின்றனர். ஹுசைன் பைலா மாதிரி இவர்கள் செய்யமாட்டார்கள் என்று என்ன நிச்சயம் என்றும் கேட்கின்றனர்.
உண்மையில் ஹகீம் இந்த இரண்டு ஆசனங்களையும் வைத்துக்கொண்டு என்னதான் செய்வது என்று மண்டையை உடைத்துக்கொண்டிருக்கின்றார். இந்த நேரத்தில்தான் பல மாவட்டங்களைச் சேர்ந்த முஸ்லீம் காங்கிரசின் பிரமுகர்கள் தமக்கு ஆதரவு இருக்கின்றது என்பதனை காட்டுவதற்காக வேன்களை பிடித்து ஆட்களை அள்ளிச்சென்று தலைவரின் வீட்டிற்கு முன்பாக வாடியடித்துக்கொண்டிருக்கின்றனர். மக்கள் மத்தியில் தமக்குள்ள ஆதரவினை தேர்தலில் காட்டுவதற்கு இவர்காளால் முடியாமல் போவிட்டது என்பது வெளிப்படையான உண்மையாகும்.
அம்பாறை மாவட்டத்திற்கு ஒரு தேசியப்பட்டியல் வழங்குவதாகயிருந்தால் அது அட்டாளைச்சேனைக்குத்தான் என்று பகிரங்கமாக உறுப்பினரை வரவேற்க தயாராகிவிட்டது.அதனை மீறினால் வாக்கு மாறியவன் , முனாபிக் என்ற சொல்லம்புகள் அவரை தூர இருந்து துளைத்துக்கொண்டே இருக்கும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியைத்தழுவிய இஞ்சினியர் ரஹ்மான் தனக்கு தேசியப்பட்டியல் வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கின்றார்.அங்குதான் கட்சியின் தவிசாளரும் இருக்கின்றார்.
திருகோணமலை மாவட்டத்தில் ஒருமுறையும் இல்லாதவாறு கட்சியின் பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விட்டது.தௌபீக் ஒற்றைக்காலில் தலைவரின் வாசலில் நின்றுகொண்டிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன..எதிர்காலத்தில்கட்சியினை கட்டிக்காப்பதென்றால் அம்மாவட்டத்திற்கும் ஒரு ஆசனத்தை வழங்க வேண்டும்.
அதேபோல வன்னியில் இம்முறை எதிர்பாராத ஏமாற்றம்.எனவே வன்னிக்கும் ஏதாவது கொடுக்க வேண்டும் இல்லாவிட்டால் இருக்கும் மிச்ச சொச்சம் ஆதரவாளர்களை ரிசாத் கவர்ந்திழுத்துவிடுவார்.
செயலாளர் நாயகம் கட்சி சிதைந்துவிடாமல் கட்சியின் அலுவல்களை தம் உயிரினும் மேலாக கருதி சதா கட்சி என்றே உருகிவடிகின்றார்.இந்தக்கட்சி சீரழிந்து போகாமல் இருப்பதற்கு அவரும் ஒரு முக்கியமான காரணி என்று பலர் மனதார புகழ்வதை கேட்கக்கூடியதாகவும் இருக்கின்றது.
ஹக்கீமின் மனது இந்த நிலைமையை எவ்வாறு சமாளிப்பது என்ற போராட்டத்தில் குழம்பிப்போய் உள்ளதாகவே அனுமானிக்க முடிகின்றது,எது எவ்வாறிருப்பினும் இவற்றையெல்லாம் கடந்து அந்த இரு ஆசனங்களையும் இம்முறை யார்யாருக்கு எப்படி பங்கிடுவது என்று ஒரு வரைபடத்தினை வரையாமல் இருப்பாரா? என்னதான் நடக்கபோகின்றது என்று பொறுத்திருந்துதான் பார்ப்போம்.

Definitely Hasan Ali willl be nominated. Next one to Amparai or Abdur Rahman?????
ReplyDeleteஐயோ பாவம்.
ReplyDeleteHe can share the 2 national list among the Ampara, Batti,Trinco, Vanni and Puththalam for 2 years based.
ReplyDeleteசுழற்சி முறை பட்டியல் போடுவோம்.
ReplyDeleteமாத்திற்கு ஓர் MP எனவே 120 பேரை MP ஆக்கலாம்.
தேசியப்பட்டியல் என்பது சிறந்தவர்களில் மிக சிறந்தவர்களுக்கே கொடுக்கப்பட வேண்டும் . இங்கு சமூக நோக்கமே கருத்தில் கொள்ளப்பட வேண்டும் எனவே எந்த மக்களை பிரதிநிதித்துவப் படுத்த அங்கு உறுப்பினர்கள் இல்லையோ அங்கு கொடுங்க . அரசியல் நோக்கத்தை விட சமூக நோக்கத்தினை முன்னிருத்துங்க . எங்கு முஸ்லிம் பா .ஊ இல்லியோ அங்கு கொடுங்க இருக்கும் இடத்திற்கு கொடுப்பது தேவை அற்ற மேலதிகம் .
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteமுதலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் இல்லாவிடின் முனாபிக் தனமாகும்
ReplyDelete