Header Ads



ஜனாதிபதியின் கோரிக்கை, எனக்கு பெரும் ஆச்சரியமாகவுள்ளது - குமார் சங்கக்கார

பிருத்தானிய உயர் ஸ்தானிகராக பதவி ஏற்குமாறு விடுக்கப்பட்ட ஜனாதிபதியின் கோரிக்கை தமக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளதாக குமார் சங்ககார தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதன் பின்னரே முடிவொன்றை தாம் எடுக்கவுள்ளதாக குமார் சங்கக்கார குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் குமார் சங்ககார இந்திய அணியுடன் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இன்று ஓய்வு பெற்றார்.

இது தொடர்பான நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன குமார் சங்கக்காரவை பிருத்தானிய உயர்ஸ்தானிகராக பதவி ஏற்குமாறு வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தார்.

Update:
--------------------------------------------------

பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதுவராகுவதற்கு சங்கக்காரவுக்கு அழைப்பு

இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் குமார் சங்கக்காரவை பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதுவராகுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி இன்று நிறைவடைந்ததுடன் , இபோட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.

இப்போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து குமார் சங்கக்கார ஓய்வுபெற்றார்.

இந்நிலையில் குமார் சங்கக்காரவை கௌரவப்படுத்தும் நிகழ்வில் வைத்தே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்படி கோரிக்கையை முன்வைத்தார்.

2 comments:

  1. நல்ல விடயம்தான் ஆனால் இவர் எந்த விதத்திலும் ஒரு ராஜ தந்திரி இல்லியே.பிரித்தாநியாவுக்கல்லாம் உயர் இச்தாநிகராக போவோர் எல்லாம் பழைய பழுத்த ராஜதந்திரிகளே அவசியம்.ஒரு மரியாதைக்காக சொன்னாரோ தெரியவில்லை ஜனாதிபதி .

    ReplyDelete
  2. Career diplomats ஏதாவது ஆணி புடுங்கி இருக்கிறார்களா?
    அறிந்தவர்கள் அல்லது Mustafa Jawfer அறிந்திருந்தால் தயவு செய்து தெளிவுபடுத்துவீர்களா?
    ஓரிரு திறமை சாலிகள் சகலதுறைகளிலும் உண்டு அவ்வாறான தனிப்பட்ட
    திறமைசாலிகளை தயவு செய்து விட்டு விட்டு Career diplomts சின்பொதுவான ஆற்றல் பற்றி தெளிவுறுத்தல் பயனுடையது

    ReplyDelete

Powered by Blogger.