Header Ads



அமைச்சர்களை நியமிப்பதில் மைத்திரி + ரணில் முரண்பாடா..??

இலங்கையின் அடுத்த நிதியமைச்சராக யாரை நியமிப்பது என்ற விடயம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஜனாதிபதி சிறிசேனவிற்கும் இடையில் கருத்துவேறுபாடு உருவாகியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையின் அடுத்த அமைச்சரவை குறித்து ஓரளவிற்கு உறுதியான முடிவு எடுக்கப்பட்டுள்ள அதேவேளை நிதியமைச்சர் யார் என்பது குறித்து நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது.

ஜனாதிபதி நிதியமைச்சை தன் வசம் வைத்திருக்க விரும்புகின்றார் என்ற ஊகங்கள் வெளியாகியுள்ள அதேவேளை அந்த பதவி அவர் ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரட்ணவிற்கு வழங்க விரும்புகின்றார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அந்த பதவியை முன்னாள் நிதியமைச்சர் ரவிகருணாநாயக்கவிற்கு வழங்க விரும்புகின்றார், அவர் மூலோபாய அபிவிருத்தி அமைச்சு  என்ற புதிய அமைச்சு ஓன்றை உருவாக்கி நிதியமைச்சின் சில அதிகாரங்களை அதற்கு வழங்க விரும்புகின்றார். கலாநிதி ஹர்ஸா டி. சில்வா நியமிக்கப்படலாமென்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.

அமைச்சர்களின் எண்ணிக்கையும் பிரச்சினைக்குரிய விடயமாக காணப்படுகின்றது, அரசியல்யாப்பில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின் படி 30 அமைச்சர்களை மாத்திரம் நியமிக்க முடியும், எனினும் புதிய தேசிய அரசாங்கம் 30ற்கும் அதிகமானவர்களை நியமிப்பதற்கு அதிகாரத்தை வழங்கலாம்.

இதன் காரணமாக அமைச்சரவை பதவியேற்பு இரு கட்டங்களாக நடைபெறும் நிலை உருவாகியுள்ளது, முதலில் 30 அமைச்சர்கள் நியமிக்கப்படுவர், செப்டம்பர் 1 ம்திகதி பாராளுமன்றத்தின் அமர்விற்கு பின்னர் அதன் அங்கீகாரத்துடன் ஏனைய அமைச்சர்கள் நியமிக்கப்படுவர்.

இதேவளை அமைச்சரவை செவ்வாய்கிழைம அல்லது புதன்கிழை பதவியேற்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதிபாதுகாப்பு அமைச்சராக ருவான் விஜயவர்த்தனவும், உள்துறை அமைச்சராக சாகலரத்தினநாயக்கவும் நியமிக்கப்படவுள்ளனர்.

இதேவேளை தேசிய பட்டியல் மூலம் திலக்மராப்பனவை நியமிப்பது குறித்தும் அதிருப்தி காணப்படுகின்றது

2 comments:

  1. It will take many more years for Mr. my3 to know who is who?

    ReplyDelete
  2. ஹர்ச டி சில்வா பொருத்தமான ஒருவர்தான்.ரவி கருனானயகாவுக்கு கடந்த ஆறு மாதத்தில் குற்றச்சாட்டு வந்தது கவனத்தில் எடுக்க வேண்டும்.நெருப்பு இல்லாமல் புகை வராது .

    ReplyDelete

Powered by Blogger.