Header Ads



பங்கேற்காத சந்திரிக்கா, குற்றம்சுமத்திய மகிந்த, ஆத்திரப்பட்ட மைத்திரி, ரணிலின் டபள் கேம்

/gtn/

பலருக்கு ஆச்சரியமளிக் கூடிய  விதத்தில் ஐக்கியமக்கள் சுதந்திர கூட்டமைப்பின் குருநாகல்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற நிகழ்வில் கலந்துகொண்டார். எவரும் எதிர்பாரத விதத்தில் உள்ளே நுழைந்த அவர் பௌத்த மதகுருமாருக்கு மரியாதை செய்துவிட்டு அவர் தனது ஆசனத்தில் அமர்ந்தார். பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்பதையும், இரு பொதுச் செயலாளர்களும் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதை பார்வையிட்ட பின்னர் ஜனாதிபதி சிறிசேன முன்வரிசையில் அமர்ந்திருந்தவர்களிற்கு கைகுலுக்கிகொண்டு வந்தவர், மகிந்த ராஜபக்சவுடனும் கைகுலுக்கினார். கடந்த வருடம் நவம்பர் மாதம் தேர்தல் ஆணையாளரின் அலுவலகத்தில் அவர் கைகுலுக்க மறுத்தது குறிப்பிடத்தக்கது.

வெள்ளிக்கிழமை அங்கு பிரசன்னமாகியிராதவர்களில் முக்கியமானவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, பாராளுமன்ற தேர்தலிற்கு பிந்திய பல விடயங்களில் அவர் குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்றியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. மகிந்த ராஜபக்சவிற்கு அடுத்ததாக அவரிற்கு என ஓதுக்கப்பட்டடிருந்த ஆசனம் காலியாக காணப்பட்டது.

தேசிய அரசாங்கம் அனைத்து கட்சிகளையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் காணப்படவில்லை என சந்திரிகா எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேசிய நல்லிணக்கத்திற்கான ஜனாதிபதி செயலணிக்கு தலைமை தாங்கும் முன்னாள் ஜனாதிபதி தேசிய அரசாங்கத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாதது குறித்து சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் தான் சிபாரிசு செய்த பிரதிநிதியொருவரிற்கு தேசிய அரசாங்கத்தில் இடமளிக்கப்படாததும் அவரிற்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற பதவியேற்பு நிகழ்வில் மகிந்த ராஜபக்ச பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்ட நிகழ்வில் கலந்துகொள்ள கூடாது என ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் தலைவர்கள் விடுத்த வேண்டுகோளை முன்னாள் ஜனாதிபதி புறக்கணித்திருந்தார்.

தேர்தல் தினத்தன்று அவர் குருநாகலில் இருந்து கொழும்பு மிரிஹானவில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார்.  தேர்தல் முடிவுகளை பார்வையிட்டுள்ளார். புதன்கிழமை சிறிசேனவை தொலைபேசியில் தொடர்புகொண்ட மகிந்த ராஜபக்ச, சிறிசேன ஐக்கிய தேசிய கட்சிக்கு உதவியிருக்காவிட்டால் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றிபெற்றிருக்கும் என தெரிவித்துள்ளார், தன்னை பிரதமராக்கப் போவதில்லை என சிறிசேன எழுதிய கடிதமே தனது கட்சியின் தோல்விக்கு காரணம் என முன்னாள் ஜனாதிபதி  குற்றம்சாட்டியுள்ளார்.

இதற்கு சிறிசேன தெளிவான பதில்களுடன் உறுதியான பதிலை வழங்கியுள்ளார், தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் 5 தலைவர்கள் என்னை பற்றி அவதூறாக பேசினர், என்னிடம் அதற்கான ஆதாரங்கள் அனைத்தும் உள்ளன, எனக்கு கொலைமிரட்டல்களையும், அச்சுறுத்தல்களையும் அவர்கள் விடுத்துள்ளனர், தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் சிறிசேனவை வீதியில் ஆடையின்றி அழைத்துச்செல்வோம் என குறிப்பிட்டுள்ளனர் என சிறிசேன ஆத்திரமாக பதிலளித்துள்ளார்.

மூன்று முன்னாள் அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர் மற்றும் மேயர் ஆகியோரை சிறிசேன பெயர் குறிப்பிட்டு சுட்டிக்காட்டியுள்ளார். இவர்கள் அனைவரும் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறிசேன தனக்கு ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பணியாற்றுவது சுலபமான விடயமாக காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்த ராஜபக்ச தான் எதிர்கட்சி தலைவராக பணியாற்றப்போவதில்லை என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எனினும் அதற்கு பின்னர் அவர் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அழுத்தங்களிற்கு உள்ளாகியுள்ளார்.

புதன்கிழமை இரவு ராஜபக்ச நிலவரத்தை மதிப்பிடுவதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்துள்ளார். ரணில் அரசாங்கத்தின் முன்னேற்றகரமான திட்டங்களிற்கு அவர்கள் ஆதரவு வழங்கவேண்டும் என கோரியுள்ளார்.

இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செல்வாக்குள்ள தலைவர்கள் சிலர் தேசிய அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது. இவர்களின் இந்த நடவடிக்கை ஜனாதிபதி சிறிசேனவிற்கு சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 12 உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவளிப்பார்கள் அது பெரும்பான்மை பெறுவதற்கு உதவுவார்கள் என்பதே அந்த திட்டம்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் குறிப்பிட்ட உறுப்பினர்கள் அமைச்சரவை பதவிகள் எதனையும் கோரவில்லை மாறாக நேரடியாக பிரதமருடன் தொடர்புகளை பேண விரும்பியுள்ளனர்.

எனினும் இதனை ஏற்க முடியாது என உறுதியாக தெரிவித்துள்ளார், கடந்த ஜனவரியிலேயே தேசிய அரசாங்கம் குறித்த உறுதிமொழி வழங்கப்பட்டுவிட்டதாக அவர் தொவித்துள்ளார்.

எனினும் ராஜபக்சவும் அவரது ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்களும் ( புரிந்துணர்வு உடன்பாட்டை எதிர்த்தவர்கள்) விக்கிரமசிங்கவிற்கு தங்களது நிபந்தனையற்ற ஆதரவை வழங்க முன்வந்துள்ளனர்.

No comments

Powered by Blogger.