சங்காவை வழியனுப்ப சங்கமித்த இலங்கை - பிரிட்டன் உயர் ஸ்தானிகர் பதவியை ஏற்க ஜனாதிபதி கோரிக்கை
தனது இறுதி டெஸ்ட் போட்டியில் விளையாடும் இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்காரவுக்கு பிரியாவிடையளிக்கும் வண்ணம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் இன்று திங்கட்கிழமை(24) காலை பி. சரவணமுத்து மைதானத்துக்கு வருகைதந்துள்ளனர்.
இலங்கை அணியின் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரரும் முன்னாள் அணித்தலைவருமான குமார் சங்கக்கார, சர்வதேசப் போட்டிகளிலிருந்து இன்றிலிருந்து உத்தியோகபூர்வமாக விடைபெற்றார். இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முடிவிலேயே அவர் ஓய்வுபெற்றார்.
சங்கக்கார விடைபெற்ற போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்வு முடிவடைந்ததன் பின்னர், குமார் சங்கக்காரவுக்கு கௌரவம் வழங்கப்பட்டது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கையின் முன்னாள் அணித்தலைவரும் அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க ஆகியோர் இதில் கலந்துகொண்டு, குமார் சங்கக்காரவைக் கௌரவித்தனர்.
இந்தக் கௌரவிப்பு நிகழ்வின்போது கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய இராச்சியத்துக்கான இலங்கையின் உயர் ஸ்தானிகர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு, குமார் சங்கக்காரவுக்கு கோரிக்கை விடுத்தார்.
தனது நன்றியறிதல் உரையில், தனது கிரிக்கெட் வாழ்வில் பங்களித்த அனைவருக்கும் நன்றி செலுத்திய குமார் சங்கக்கார, இரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்தார். அத்தோடு, அஞ்சலோ மத்தியூஸ் தலைமையிலான இலங்கை அணிக்கு அற்புதமானதொரு எதிர்காலம் காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

As Sri lankans We are all very proud of him.An unforgertable name in the history of cricket. God bless him!
ReplyDeletecongratulations sanga. appreciate the quality of sportsmanship shown to the world. but i think you are not a career diplomat or foreign service exam qualified person but a sportsman. accept the high commissioner post in the uk if you are qualified.
ReplyDeleteSanga is a great sportsman. No doubt about it. Offering a Higher Commissioner job at the farewell party is inappropriate. Do not mix politics and sports.
ReplyDelete