Header Ads



பிரதமர் ரணிலின் கவனத்திற்கு...!


-அபுதாபியிலிருந்துஜெலில்-

இயற்கை செல்வம் நிறைந்த நம் இலங்கை தாய் நாட்டின் புதிய பிரதமராக பதவியோற்றிருக்கும்  ரணில் விக்கிரமசிங்ஹ அவர்களுக்கு இலங்கை வாழ்,வெளிநாடுகளில் வாழும் முஸ்லிம்கள் சார்பாக வாழ்துக்களை தொரிவித்துக்கொள்கிறோம்.

நடந்து முடிந்த தேர்தலில் எத்தனையோ பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து சவால்களை எதிர் கொண்டு ஆகக்கூடிய விருப்பு வாக்குகளால் தொரிவு செய்யப்பட்டு.ஊழல் நிறைந்த ஆட்சிசெய்த முன்னால் ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்பினீர்கள்.

மேலும் மக்கள் மனதில் குறிப்பாக(முஸ்லிம்களின்)உள்ளம் வென்ற சிறந்த ஆளுமைமிக்க தலைவனாக,வீரனாக வாழ்ந்துகொண்டிருக்கிறிர்கள்.இதில் எந்த ஐய்யப் பாடுமில்லை. காரணம் உங்கள் வெற்றியில் முஸ்லிம்களின் பங்களிப்பு.95% வீதம் உண்டு அல்ஹம்துலில்லாஹ்.

முஸ்லிம்கள் எத்தனையோ பிரச்சினையை சந்தித்தார்கள் இத்தனைக்கும் ஒரு தீர்வு கிடைக்க வோண்டும்!அதற்காக ஒரு நேர்மையான ஒருவர் கிடைக்க மாட்டாரா?என்று தவித்தோம். காரணம் இந்த நாட்டில் பிறந்து வளந்து இந்த நாட்டை நோசிக்கும் மக்களாக அன்றும்,இன்றும் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

அப்போதுதான் நேர்மை,பக்கச்சார்பற்ற,கண்ணியம் மக்களோடு சிரித்து உறவாடும் சுபாவம் கொண்ட உங்களை இறைவன் வெற்றிபெற செய்தான்.(அல்ஹம்துலில்லாஹ்)

கெளரவ பிரதமர் அவர்களே உங்களிடம் ஒரு பணிவான வேண்டுகோல்.நீங்கள் வெற்றி பெற்று பிரதமராக பதவியும் எடுத்துவிட்டீர்கள். உங்கள் வெற்றிக்கு மக்களின் பங்குண்டு.அது பொரும்பான்மை மக்களாகவும் இருக்கலாம்,சிறுபான்மை மக்களாகவும் இருக்கலாம் அதில் எந்த சதேகம் இல்லை அதுதான் உண்மை.

அதே போல் உங்கள் வெற்றிக்கு மிகவும் பக்க பலமாக உறுதுனையாக வெற்றியின் பங்காளியாக இருந்தவர்தான்.மாகாணசபை உறுப்பினர் மக்களின் மனதில் என்றும் இருப்பவர்!மக்களுக்கு ஏதும் பிறச்சினை என்றால் எதையும் எதிர் பார்க்காமல் களத்தில் நின்று குரல் கொடுத்த,கொடுக்கின்ற எதற்கும் அஞ்சாத(அல்லாஹ்வைத்தவிர)ஒரு மனிதர்! உங்களின் வார்த்தைக்கு மரியாதை கொடுத்து நம்பிக்கையோடு உங்களுக்காக இரவு பகல் என்று பாராமல் குரல் கொடுத்தவர்தான் ஆஸாத் சாலி நீங்கள் அறிவீர்கள்.

நீங்கள் சென்ன அந்த ஒரு வார்த்தையை நம்பி அயராது பாடுபட்டவர் உங்களுக்காக.அவர் மட்டுமல்ல நாங்களும் நம்பிருந்தோம் உங்கள் வார்த்தையை.
அதுதான் அவருக்கு தோசியப்பட்டியல் மூலமாக பாராளமன்றம் செல்லும் வாய்பை தருவதாக.
ஆனால் இப்போது பல செய்திகளுடாகவும் படிக்க கிடைத்தது ஐக்கிய தோசிய கட்சியின் தோசியப்பட்டியல் அடங்கிய  பெயரில் அவர் இல்லை என்று.
ஏன் அவருக்கு கொடுக்கப்பட வில்லை??

எங்களைப் பொருத்தவரை அவர் ஒரு துணிச்சல் மிக்கவர் அவரை பாராளுமன்றம் அனுப்புவதுதான் எங்களின் எண்ணமாக இருந்தது.
அவர் மாதரி குரல் கொடுக்கக்கூடியவர் யாருமில்லை!இப்போது இருக்கும் முஸ்லிம் தலைவர்களில்.

அவர் நினைத்தால் தேர்தலில் தனியாக கூட நின்று வெற்றி பெற்றிருப்பார் (அல்லாஹ் நாடினால்) மக்களும் அரை ஆதரித்திருப்பார்கள். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை.உங்களின் வார்த்தைக்கு மரியாதை கொடுத்து நம்பிக்கையோடு களத்தில் நின்றார் வெற்றியும் கிடைத்தது.

நாங்களும் நம்பித்தான் இருந்தோம் உங்கள் மீது வைத்த நம்பிக்கையில். ஆனால் இப்போது மக்கள் மத்தியில் ஒரு சந்தேகம் வருகிறது.இது யாருடையாவது அழுத்தம் காரணமாக இருக்கலாமா? என்று சிந்திக்கத் தோனுது!காரணம் நீங்கள் ஒரு நேர்மையானவர் சென்னால் நிறைவேற்றுபவர் அதனால்தான்.

கெளரவ பிரதமர் அவர்களே!எது எப்படியே நீங்கள் இந்த நாட்டு பிரதமர் முஸ்லிம்களின் தோழன்,உங்கள் அன்பான புண் சிரிப்பினால் எல்லோரையும் ஆதரிப்பவர் இன,மத,வேதம் வோறுபாடு இல்லாமல் சேவை செய்யக்கூடிய ஏன் செய்து காட்டிய ஒரு மனிதர்.ஏழைகளின் தோழன்.இப்படி செல்லிக்கொண்டோ போகலாம்.நீங்கள் உண்மையாக இந்த நாட்டு முஸ்லிம்கள் மீது அன்பு வைத்திருப்பது உண்மையாக இருந்தால்.தயவு செய்து ஆஸாத் சாலிக்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவோற்றி. அவரை பாராளுமன்றம் அனுபுங்கள்.

அவருக்காக இல்லா விட்டாலும் எங்களுக்காக கொடுங்கள். அது உங்கள் மீது வைத்த நம்பிக்கையும் காப்பாத்தும்.

நீங்கள் அவருக்கு தோசியப்பட்டியல் கொடுத்து பாராளுமன்றம் அனுபுவீர்கள் என்ற நம்பிக்கையோடு காத்துக்கொண்டிருக்கிறோம். அவர் திறமை மிக்கவர் எதையும் திறன்பட செய்வார்.எதிர்காலத்தில் மக்களுக்காக அவர் மூலம் நல்லது நடக்கட்டும்!அதில் நீங்களும் ஒரு பங்காளியாக இருப்பீர்கள் அதுதான் உண்மை.

5 comments:

  1. Assath sally should have contested in Colombo district where he had a vote base. He should not run away from Colombo and stay in the party eventhough difference of opinion.

    ReplyDelete
  2. இதை வைத்து நாம் பிரச்சினை உண்டு பண்ணக்கூடாது பொறுமையாக இருப்போம்.நாம் அங்குமிங்கும் எதிப்பளைகளை ஏற்ப்படுத்தி இந்த அரசாங்கத்தின் வெறுப்பையும் சம்பாரித்து விடக்கூடாது என்ன செய்யலாம் நடந்தது நடந்து விட்டது ஒருநாள் சிந்திப்பார்கள்.அமைதியாக இருந்து காய் நகர்த்துவோம்.

    ReplyDelete
  3. oorukkoru MP kettu alaikirom, awwalavu thaan.

    ReplyDelete

Powered by Blogger.