புத்தளத்திலிருந்து ரிஷாத் பதியுதீனுக்கு...!
வந்தாரை வாழ வைக்கும் மண் என்று சிலாகித்துப் பேசப்படும் புத்தளம் மற்றும் அங்கு வாழும் மக்களை கௌரவிக்கும் முகமாகவும், அவர்களுக்கு செய்யும் ஒரு நன்றிக் கடனாகவும் தமது கட்சிக்கு கிடைத்த ஒரேயொரு தேசியப் பட்டியல் பாராளுமன்ற ஆசனத்தை மூத்த அரசியல்வாதியான அல்ஹாஜ் எம்.எச்.எம்.நவவிக்கு வழங்கியமைக்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அல்ஹாஜ் ரிஷாத் பதியுதீன் அவர்களுக்கு புத்தளம் மக்கள் சார்பாக எமது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
உண்மையில் இந்த தேசியப் பட்டியல் பாராளுமன்ற ஆசனத்தை புத்தளம் மண்ணுக்கு வழங்குவதற்கு அவர் தனது கட்சிக்குள் பலத்த சவால்களை சந்திக்க நேர்ந்ததை நாம் அறிகிறோம். இருந்தும் கட்சியா, தனி நபரா என்ற நிலைக்கு அப்பால் சமூகம் சார்ந்த ரீதியில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளமையை நாம் வெகுவாக பாராட்டுகிறோம். குறிப்பாக அக்கட்சியில் கிழக்கில் போட்டியிட்ட வேட்பாளர்கள் புத்தளத்தின் நிலையை யதார்த்தபூர்வமாக புரிந்து, ஒருமித்து இதற்கு இணக்கம் தெரிவித்தமை அவர்களது அரசியல் முதிர்ச்சி மற்றும் பரந்த மனப்பான்மையை பறைசாற்றுகிறது.
உண்மையில் இந்த தேசியப் பட்டியல் பாராளுமன்ற ஆசனத்தை புத்தளம் மண்ணுக்கு வழங்குவதற்கு அவர் தனது கட்சிக்குள் பலத்த சவால்களை சந்திக்க நேர்ந்ததை நாம் அறிகிறோம். இருந்தும் கட்சியா, தனி நபரா என்ற நிலைக்கு அப்பால் சமூகம் சார்ந்த ரீதியில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளமையை நாம் வெகுவாக பாராட்டுகிறோம். குறிப்பாக அக்கட்சியில் கிழக்கில் போட்டியிட்ட வேட்பாளர்கள் புத்தளத்தின் நிலையை யதார்த்தபூர்வமாக புரிந்து, ஒருமித்து இதற்கு இணக்கம் தெரிவித்தமை அவர்களது அரசியல் முதிர்ச்சி மற்றும் பரந்த மனப்பான்மையை பறைசாற்றுகிறது.
மேலும் வன்னியில் போட்டியிட்டு ரிஷாத் பதியுதீனுக்கு அடுத்ததாக உள்ள வேட்பாளர் தனக்கு அசௌகரியமான நிலை ஏற்பட்டும் கூட புத்தளத்து விடயத்தில் தனது நிலைப்பாட்டில் சாதகமான போக்கை கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. ஒட்டு மொத்தமாக எல்லா தரப்பாரும் மனமுவந்து இந்த கைங்கரியத்தை செய்ய வேண்டும் என்று தான் நாம் மிகவும் எதிர்ப்பார்த்தோம். இறைவன் அருளால் அது ரிஷாத் பதியுதீன் தலைமையில் சாத்தியமானதை இட்டு நாம் மிகவும் மகிழ்வுறுகிறோம். நன்றி தெரிவிக்கிறோம்.
இந்த எம்.பி. நியமனம் புத்தளம் மாவட்ட முஸ்லிம்கள், தமிழர்கள், புத்தளம் பிரதேசத்தில் வாழும் இடம் பெயர்ந்த மக்கள், புத்தளம் தொகுதி சிங்கள மக்கள் ஆகியோருக்கு பயன்பட வேண்டும் என்பதுவே எமது பேரவாவாகும். அனைத்து இன மக்களின் அபிலாஷைகள், எதிர்ப்பார்ப்புக்கள் நிறைவேற இந்த எம்.பி எனும் பரிசு பயன்படுத்தப்பட வேண்டும் என்று நாம் அன்பாக கோரிக்கை விடுக்கிறோம்.
எஸ்.ஆர்.எம். எம். முஹ்ஸி
முன்னாள் புத்தளம் நகர சபை உறுப்பினர்
சமூக ஆர்வலர்
இந்த எம்.பி. நியமனம் புத்தளம் மாவட்ட முஸ்லிம்கள், தமிழர்கள், புத்தளம் பிரதேசத்தில் வாழும் இடம் பெயர்ந்த மக்கள், புத்தளம் தொகுதி சிங்கள மக்கள் ஆகியோருக்கு பயன்பட வேண்டும் என்பதுவே எமது பேரவாவாகும். அனைத்து இன மக்களின் அபிலாஷைகள், எதிர்ப்பார்ப்புக்கள் நிறைவேற இந்த எம்.பி எனும் பரிசு பயன்படுத்தப்பட வேண்டும் என்று நாம் அன்பாக கோரிக்கை விடுக்கிறோம்.
எஸ்.ஆர்.எம். எம். முஹ்ஸி
முன்னாள் புத்தளம் நகர சபை உறுப்பினர்
சமூக ஆர்வலர்

முஹ்ஸி அவர்களே, புத்தளம் மக்களின் ஒற்றுமையை சீர்குலைத்து, அவர்களுக்கு கிடைக்கவேண்டிய பிரதிநிதித்துவத்தை, அவர்களின் தன்மானத்தை தனது காலடியில் போட்டவர்தான் இந்த ரிசாத் வதுர்தீன். உங்களை போன்றவர்கள் சரியாக சிந்தித்து புத்தள மக்களை சரியாக வழி நடத்தியிருந்தால் இந்த நன்றிகளுக்கும் அறிக்கைகளுக்கும் அவசியம் ஏற்பட்டிருக்காது. ரிசாத்துக்கு கூஜா தூக்கும் சிந்தனையை விட்டு விட்டு, புத்தள மக்களை எப்படி ஒற்றுமை படுத்தலாம் என்பதை பற்றி சிந்தியுங்கள். ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
ReplyDeleteசகோ. முஹ்சி போன்றவர்கள்..... புத்தளம் மாவட்டத்தின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு..... இந்த சுயநல அரசியலுக்கப்பால்...... நிரந்தரமான பொதுநலத்துடன் கூடிய அரசியலைப் பற்றி சிந்திக்க வேண்டும்......
ReplyDeleteஏற்கனவே மூன்று கூறுகளாகப் பிரிந்திருக்கும் புத்தள சமூகத்திற்கு...... குறுகிய அரசியல் நோக்கமுடைய... பொரும்பான்மையின் ஏஜண்டுகளாக கடந்த காலங்களில் செயல்பட்டு.... முஸ்லிம் காங்கிரஸைப் பூண்டோடு அழிப்பதன் மூலம்.....தனது அரசியல் இருப்பைப் பலப்படுத்த நினைக்கும் ACMC போன்ற நான்காவது ஒரு கட்சி....புத்தளத்திற்கு தேவையா???
இதன் பின்னணி என்ன என்பதைப் பற்றி சிந்தித்து செயல்படுவதை விட்டுவிட்டு..... குடும்பத்தோடு கூஜா துக்குவதை நிறுத்திக் கொள்ளுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கின்றேன்......
தாராலத்தன்மையுடைய கடிதம்.மறுப்பதற்கில்லை.இது புத்தளம் மக்களுக்கு ரிஷாத் அவர்கள் போட்ட பிச்சை.ஏன் அவ்வலவு முஸ்லிம்கள் இருந்தும் ஒற்றுமை இல்லாமல் கௌரவமான முறையில் ஒரு பிரதிநிதியை பெற முடியவில்லை என்று வெட்கப்பட வேண்டும்.ஒற்றுமையின் மகான்கள் நாங்கள் என்று மார்தட்டும் நாங்கள்.ஏன் ஒற்றுமைப்பட்டு ஒரு MP எடுக்க முடியவில்லை.சிந்தியுங்கள் புத்தளம் மாவட்ட உலமாக்களே,ஆசிரியர்களே,புத்தி ஜீவிகளே,சமூக நலன் விரும்பிகளே,நடந்தது நடந்து முடிந்தது போகட்டும்.எதிர்வரும் பிரதேச சபை.மாகான சபை,பாராளுமன்றம் போன்றவற்றிலாவது ஓன்று படுவோமா ?அல்லாஹ் நம்மை ஒன்றுபட வைப்பானாக அமீன்.
ReplyDeleteThe first speaker H.S Ismail was from Puttalam. The town has a heritage. I lived in the town from 1948 to 1960. I have written two short stories in Tamil based on Puttalam environment. I was living at Poles road, opposite late Proctor Cassims' house. My father was working in the Kachcheri. Puttalam had one time the best Volley ball team.
ReplyDeletewhy these people doesn't understand the truth. and why you people talking about the party and the individual like person Mr. Rishad. just look at the ampara muslims they were puts their hands together and they have got the 3 seats for them so in that particular united why we din't do it it doesn't mate which party it is and the leader it is about to show the island that our muslims independent and the same time as well the community and the unity. So my point of view as i am living in putalam this at least we have got the opportunity now that we will look for the smooth future so insha allah we will wait for the next opportunity and we will make it as much as we can all what i am trying to say is if any one trying to be a leader with his good heart we supposed to allow them to do it and we will wait for the result and after that we can say anything that particular personality or either party
ReplyDeletefirst of all thanks to allah that we have got the M P seat for puttalam wether some people like or not it has come through from Mr. Rishad so here the social analyst Mr. Mohamed Muhsi message was appreciable by side of the people. so some people would say that we working for him and still some one still comment that Mr. Mohamed Muhsi working for him like that. as i know ans the my point of view is if soe one help us we must thank for the personality this is what the human being. so Mr. Rishad has did which is best for the people so from the people side we must thank him i would say to Mr. Mohamed Muhsi keep doing this and NEVER GIVE UP foe any comment if it is against to you SIR
ReplyDelete@Rizwan Raseen: முஸ்லிம்களின் தனித்தன்மையை இல்லாதொழிக்க பேரின வாத சக்திகளுடன் சேர்ந்து சதி செய்வதாக ரிஷாத் மீது பல தரப்பட்ட தரப்பினரிடமிருந்து குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணமேயுள்ளன. மேலெழுந்தவாரியாக நோக்கும்போது சமுகத்திற்கு நல்லது செய்வது போலத் தோன்றினாலும் ஆழமாக தூரநோக்குடன் சிந்தித்துப் பார்க்கும்போது நெருடலாக இருப்பது உண்மைதானே
ReplyDelete"செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது". என்றாலும் "சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை நேரா நிரந்தவர் நட்பு." என்பதையும் கருத்தில்கொண்டு செயல்படுவதே ஏற்புடைத்து. கிழக்கில் முஸ்லிம்களின் ஒற்றுமை என்றுமில்லாதவாறு இம்முறை சீர்குலைக்கப்பட்டு பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் (off record) நடந்தேறியது எதனை எதிர்வு கூறுகிறது ? இதன் பின்னணியில் கண்ணுக்குப் புலப்படாத சதிவலை பின்னப்பட்டு சுயநல அரசியல்வாதிகள் அதில் சிக்கி இருப்பது உண்மை என்பதைத்தானே!
minister Rishaad wanni meethu kaatuwathuthaan unmai anbu.chairman Abdul Baaiz puttalam meethu kaatu wathu thaan unmai anbu.maaraaha Mns Rishaad puttalam meethu anbu kaatuwatho Chmn Abdul Baaiz wannimeethu anbu kaatuwatho nichayam oru pin ethir paarpudan thaan ALLAH Mihe Arinthawan
ReplyDelete