Header Ads



ராஜபக்ச குடும்பத்துடன், எந்த தொடர்பையும் விரும்பாத வசிம் தாஜூடீன்

-gtn-

இலங்கையின் பிரபல ரக்பி வீரர்  வாசிம் தாஜூடீனை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் விசேட மரணப் படையணியினரே படுகொலை செய்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரக்பி வீரர் படுகொலை செய்யப்பட்ட அன்றிரவு யோசித ராஜபக்சவுடன் காணப்பட்ட ரக்பி வீரர்கள் குழுவொன்றின் மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

அன்றிரவு யோசிதவிற்கும் குறிப்பிட்ட ரக்பி வீரரிற்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றதாகவும், அதனை தொடர்ந்து கடும் சீற்றமடைந்து காணப்பட்ட யோசித கோத்தபாய ராஜபக்சவை சந்தித்து தாஜூடீனைமுடித்துவிடுமாறு கோரியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட ரக்பி வீரரை கடற்படையில் இணைப்பதற்கு பல முறை யோசித முயன்றதாகவும், எனினும் அவர் அதனை பல தடவைகள் நிராகரித்ததுடன் தான் ராஜபக்ச குடும்பத்தினருடன் எந்த தொடர்பினையும் பேண விரும்பவில்லை என குறிப்பிட்டு வந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

2 comments:

  1. Don't makes storys ,take the necessary action.

    ReplyDelete
  2. If they make story"s only they can sell their paper or attract eReaders!

    ReplyDelete

Powered by Blogger.