Header Ads



ரணில் விக்ரமசிங்க, பழிவாங்க மாட்டார் - மகிந்த ராஜபக்ச

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் அரசியலில் ஈடுபடுவது சுலபமானது எனவும் அவர் துரத்தி துரத்தி பழிவாங்க மாட்டார் எனவும் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவி குறித்து தினசரி பத்திரிகை ஒன்றிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் எனக்கு எந்த நிலைப்பாடும் இல்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் குமார் வெல்கம எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு பொருத்தமானவர் என என்னிடம் கூறியுள்ளனர்.

அதேவேளை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலர் அரசாங்கத்தில் இணைந்து கொள்வதால் எந்த பிரச்சினையும் இல்லை எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

5 comments:

  1. Ranil or MY3 has not right bypass the LAW for any individuals in this land, Rather they are appointed to make sure the LAW is implemented in correct way. If they fail to do their duty.. God will punish them in his own way.

    ReplyDelete
  2. நீங்கள் சொல்வது சரிதான் பழிவாங்க மாட்டார் ரணில்.பழிவாங்கவும் கூடாது.ஆனால் நீங்கள் செய்த குற்றங்களுக்கு நீதி கிடக்க வேண்டுமல்லவா ?MR. MAHINDA கள்ளனுக்கு, கொள்ளைக்காரனுக்கு ,மன்கொல்லைகாரனுக்கு,கொலைகாரனுக்கு,கொளைசையச்சொன்னவனுக்கு இவ்வாறு பல வகையான தண்டனைகள் நம் நாட்டில் இருக்கிறது.இத்தண்டனைகள் இருக்கா இல்லையா என்று புரியாமல்லா நீங்கள் தப்புச்சைதீர்கள் ?இந்த குற்றங்களில் எதை நீங்கள் விட்டும் வைத்தீர்கள்.ஆகவே உப்பு திண்டவன் தண்ணி குடிக்க வேண்டும் தப்பு செய்தவன் தண்டனை அனுபவிக்கத்தான் வேண்டும்.

    ReplyDelete
  3. ரணில் மாதத்தையோ என்று கிண்டல் அடித்ததல்லாம் நீங்கள் மறந்து விட்டீர்கள் நாங்கள் மறக்கவில்லை.எல்லாம் நெட்ல இருக்கு..

    ReplyDelete
  4. இந்த ஆள், சைனீஸ் சர்க்கஸ்ல இருந்திருக்கக் கூடும், என்னமா பல்டி அடிக்கிறான் பாவி மனுஷன். தேர்தல் காலத்தில் மேடைக்கு மேடை ரணில் என்னையும் என் குடும்பத்தையும் பழி வாங்குகின்றார் குய்யோ முறையோ என்று கூவித் திரிந்ததென்ன? இப்போது... ??

    ReplyDelete

Powered by Blogger.