Header Ads



கொள்ளைகாரர்களும் தேர்தலில் போட்டி

கட்சியை பற்றி சிந்திக்காமல் நாடு குறித்து சிந்தித்து அரசியல் தீர்மானங்களுக்கு வருமாறு அமைச்சர் அர்ஜூன ரணதுங்க பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடும் அவர், இன்று வேட்புமனுவை தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் ஊழல், மோசடியாளர்கள் நிறைந்துள்ளனர்.

ஊழல்,மோசடிகளில் ஈடுபடுவோர்,கொலையாளிகள், போதைப் பொருள் விற்பனையாளர்களுக்கு வேட்புமனுவை வழங்க வேண்டாம் என நாங்கள் கோரினோம். எனினும் அது நிறைவேறவில்லை.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் ராஜபக்சவின் சக்திகள் இன்னும் செயற்பட்டு வருகின்றனர்.

உதாரணமாக கம்பஹா மாவட்டத்தை எடுத்து கொண்டால், திருடர்கள், கப்பம் பெற்றவர்களின் மனைவிகளுக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளனர். இது கேலிக்கூத்தானது.

கடந்த காலங்களில் கொள்ளையிட்டவர்களே வெற்றிலை சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

இந்த நிலைமையை மாற்றி, ஜனவரி 8 ஆம் திகதி ஏற்படுத்தி மாற்றத்தை முன்னோக்கி கொண்டு செல்ல நாம் அனைவரும் தற்போது ஒன்றிணைய வேண்டும்.

இதனால், கட்சியை விட நாடு மிகவும் முக்கியமானது என்றும் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.