தேர்தல் செயற்பாடுகளிலிருந்து, ஜனாதிபதி விலகியிருப்பார் - ரணில் நம்பிக்கை
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் பொதுத்தேர்தலின் போது சுயாதீனமாக செயற்படுவார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
த ஹிந்து நாளிதழ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. அலரி மாளிகையில் த ஹிந்து நாளிதழின் செய்தியாளருடன் இடம்பெற்ற நேர்காணலின் போதே பிரதமர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் முகமாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமது பதிலை வெளியிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சார்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் வேட்பு மனு வழங்கப்பட்டமை குறித்து ஹிந்துவின் செய்தியாளர் பிரதமரிடன் வினா எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த பிரதமர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தமது கட்சியினுள் பூரண கட்டுப்பாடு இல்லை என குறிப்பிட்டார்.
ஆனால், கட்சியினுள் இடம்பெறும் செயற்பாடுகள் தொடர்பாக சில அழுத்தங்களை பிரயோகிக்க முடியும்.
எவ்வாறாயினும். தேர்தல் செயற்பாடுகளில் ஜனாதிபதி விலகியிருந்து செயற்படுவார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Post a Comment