Header Ads



அதிகாரத்தை கைப்பற்ற மஹிந்த காட்டும் பேராசையினால், சுதந்திரக் கட்சி பிளவடைந்துள்ளது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் அதிகாரத்தை கைவிட முடியவில்லை என பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் மைத்திரிபால சிறிசேனவை வெற்றி பெறச் செய்து, மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சியை முடிவுறுத்தி பீதியை இல்லாமல் செய்த போதிலும் மஹிந்த ராஜபக்ஸவினால் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாது ஆட்சிக்கு வர முயற்சிக்கின்றார் என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் பல்வேறு அழுத்தங்களும் அச்சுறுத்தல்களும்; காணப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். அரசியல் நடவடிக்கைகளுக்கு இடமளிக்கப்படவில்லை எனவும், வெள்ளைவான் கலாச்சாரத்தினால் மக்கள் பீதியில் உறைந்திருந்தார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எந்தவொரு நபரும் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்த அனுமதிக்கப்படவில்லை எனவும் , இன்று மஹிந்த ராஜபக்ஸவிற்கும் தனது நிலைப்பாட்டை சுதந்திரமாக வெளிப்படுத்தக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

100 நாள் திட்டத்தை ஆரம்பித்ததே பொதுத் தேர்தலை நடத்தும் நோக்கிலேயேயாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும், எரிபொருளின் விலை குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்களுக்கு மேலும் பிரச்சினைகள் காணப்படுவதாகவும் அந்தப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற காட்டும் பேராசையினால் இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாக பிளவடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.