Header Ads



ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 2 அணிகள் - ராஜித

தேர்தலை இலக்கு வைத்து தயாரிக்கப்பட்ட ஆவணமாகவே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை கருத வேண்டுமென ராஜித சேனாரட்ன  இன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஆகஸ்ட் 18 ஆம் திகதிக்கு பின்னர் இலஞ்சம் மற்றும் ஊழல், மோசடி விசாரணை ஆணைக்குழுவிற்கு புதிய ஆணையாளர்கள் நியமிக்கப்படுவார் என அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இலஞ்சம் மற்றும் ஊழல், மோசடி விசாரணை ஆணைக்குழு இதுவரை பாரதூரமான எந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்தும் உரிய விசாரணைகளை நடத்தவில்லை எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

ஆணைக்குழுவின் தலைவர் மீதும் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அவரது ஆணைக்குழுவே அவர் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரித்து தலைவரை விடுதலை செய்தது.

ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அதன் விசாரணைகளுக்கு நேரடியான அழுத்தங்களை பிரயோகித்தார்.

அதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இரண்டாக பிளவுப்பட்டு, அந்த முன்னணியில் இரண்டு அணிகள் உள்ளன. இது எமக்கு சாதகமானது. மைத்திரி அணிக்கு இது சாதகமாக இல்லையா என்பது எனக்கு சம்பந்தமில்லாதது. நான் தற்போது ஐக்கிய தேசியக் கட்சியில் இருக்கின்றேன்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் தானசாலையாக காணப்படுகிறது. ஆட்சியில் இருக்கும் போது திருமணம் செய்யும் ஜோடிகளிடம் 5 ஆயிரம் ரூபாவை அறவிட்டவர்கள், புதிதாக திருமணம் செய்வோருக்கு இரண்டு லட்சம் ரூபாவை வழங்க போவதாக கூறுவது கேலிக்குரியது.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தோல்வியடையும். இதனால், வாக்குறுதிகளை அள்ளி விட அவர்கள் அஞ்ச மாட்டார்கள் எனவும் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.