Header Ads



சகோதரனின் மருத்துவ செலவுக்காக, தங்கை சேகரித்த நிதி

மாற்றுத் திறனாளியாக மாறிப்போன 7 வயது அண்ணனுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தெருவில் எலுமிச்சம் பழச்சாறு விற்று 5 வயது சிறுமி சுமார் 15 லட்சம் ரூபாயை இதுவரை சேர்த்துள்ளார்.

அமெரிக்காவின் டொரொண்டோ நகரை சேர்ந்த நாடாவ் என்ற பெயர் கொண்ட சிறுவனுக்கு இரண்டு வயதானபோது ஏஞ்சல்மேன் சிண்ட்ரோம் என்ற நரம்பு மண்டலத்தை பாதிப்படைய வைக்கும் கொடிய வியாதி தாக்கியது. அதன் பாதிப்பால் மூளையின் செயல்திறனும் பேச்சுத்திறனும் தடைபட்டது.  அந்த சிறுவனுக்கு தற்போது 7 வயதாகின்றது. படுத்த படுக்கையாக இருக்கும் நாடாவுக்கு சிகிச்சை அளிக்க போதிய வசதி இல்லாததால் அவனது பெற்றோர் சோகத்தில் ஆழ்ந்தனர்.

இந்த சோகத்தை பகிர்ந்துக் கொள்வதோடு மட்டுமின்றி, அதை தீர்க்கும் வழியையும் தேடி தங்களது பெற்றோர் நடத்திவரும் தெருவோர கடையில் கோடைக் காலத்தில் ஜில்லென்ற எலுமிச்சம் பழச்சாறும், குளிர்காலத்தில் சூடான சாக்லேட் பானங்களையும் விற்றும், பரிமாறியும் நாடாவ்-வின் தங்கையான நாமா உஸான் இதுவரை சுமார் 25 ஆயிரம் அமெரிக்க டாலர்களை சேர்த்துள்ளார்.

இந்த சிறுமிக்காகவே அந்த தெருவோரக் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களில் ஒருவர் 20 ஆயிரம் டாலர்களை நாடாவின் சிகிச்சை செலவுக்கு நிதியாக உதவியுள்ளார்.

No comments

Powered by Blogger.