Header Ads



யானை தாக்கியபோது மயக்கமுற்றார் - அவர் வபாத்தானார் என எண்ணிய யானை அவ்விடத்தைவிட்டு விலகிச் சென்றது

(சுலைமான் றாபி)

நிந்தவூர்-08ம் பிரிவு  அல்-மஸ்லம்  வீதியில் வசிக்கும் முகம்மது இஸ்மாயில் அமீர் (60) நேற்று முன்தினம் (13)  'நிந்தவூர் மானாம்வட்ட' பிரதேசத்தில் தனது விவசாய நடவடிக்கைளை செய்து கொண்டிருந்த  வேளை திடீரென அங்கு நுழைந்த யானை அவரைத்தாக்கிய போது அவர் உடனே மயக்கமுற்றநிலையில் காணப்பட்டதாகவும்,  அவர் இறந்துவிட்டார் என எண்ணிய யானை அவ்விடத்தைவிட்டும் விலகிச் சென்றுவிட்டது. இந்த சம்பவங்களை கவனித்த ஏனைய விவசாயிகள் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்குச்சென்று குறிப்பிட்ட விவசாயியை கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்றபோது தற்பொழுது அவர் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதேவேளை அண்மைக்காலமாக நிந்தவூரிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் காட்டு யானைகளின் தொல்லைகள் அதிகரித்துள்ளமையினால் விவசாயச் செய்கைகளில் ஈடுபடும் விவசாயிகளும் ஏனைய பொது மக்களும் உயிர் அச்சறுத்தல்களுக்கு உள்ளாவதோடு இதன் மூலம் பல அசௌகரியங்களையும் சந்தித்து வருகின்றனர். மேலும் இந்த காட்டு யானைகளில் தொல்லைகள் விடயத்தில் வன பரிபாலன அதிகாரிகள் முறையான நடவடிக்கைகள் ஏதும் எடுக்காமல் அசமந்தப் போக்கில் காணப்படுவதினால் இந்த யானைகளில் அட்டகாசங்கள் தொடர்ந்தும் அதிகரித்த வண்ணமாகவே காணப் படுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

No comments

Powered by Blogger.