மஹிந்தவின் சகோதரரை, விமர்சிக்கிறார் அஸ்வர்..!
கடந்த ஆட்சிக் காலத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மிக நெருங்கிய விசுவாசியாக செயற்பட்டு வந்த ஏ.எச்.எம். அஸ்வர், முன்னாள் ஜனாதிபதியின் சகோதரர் சபாநாயகர் சமால் ராஜபக்ஸவை விமர்சனம் செய்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பில் சபாநாயகரின் தீர்மானம் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
சபாநாயகர் சமால் ராஜபக்ஸ தனது அதிகாரங்களை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் ஒப்படைப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் தனது பொறுப்புக்களை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்படுவது பாராளுமன்றின் மரபுகளுக்கு பாரிய குந்தகத்தை ஏற்படுத்தக் கூடுமென அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதனை நிர்ணயிக்குமாறு கட்சிகள் சபாநாயகரிடமே கேட்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

சில நேரங்களில் சில மனிதர்கள், இவர்???
ReplyDeleteஇந்த ஆளின் போட்டோ போட்ட செய்திக்கு கொமன்ட் பண்ணினேன் என்பதை நினைக்கும் பொழுது, அதுவும் வெட்கமாக இருக்கிறது.
ReplyDeleteenakku ulahithilaye mihavum veruppukku uriyavar..
ReplyDeleteivar islamiyar enpathuthan kavalai..