Header Ads



மஹிந்தவின் தோல்­விக்கு நானே பிர­தான கார­ணம், வெற்றிகளுக்கு நானே பொறுப்பாவேன் - பஷில்

பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்சர் என்ற வகையில் தான் பதவி வகித்த காலப்­ப­கு­தியில் நிதி மோச­டியில் ஈடு­பட்­ட­தாக அர­சாங்­கத்­தினால் பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­டுள்­ளன. இதன்­படி தன் மீது சுமத்­தப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பி­லான பொலி­ஸாரின் விசா­ர­ணைக்கு தான் பூரண ஒத்­து­ழைப்­பினை வழங்கத் தயார் என முன்னாள் அமைச்சர் பஷில் ராஜ­பக்ஷ தெரி­வித்தார் .

நடந்து முடிந்த ஜனா­தி­பதி தேர்­தலின் பிற்­பாடு அமெ­ரிக்கா சென்ற முன்னாள் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்சர் பஷில் ராஜ­பக்ஷ நேற்று மீண்டும் இலங்கை வந்­த­டைந்தார். பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்கும் போதே பஷில் ராஜ­பக்ஷ இவ்வாறு தெரி­வித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில்,

நடந்து முடிந்த ஜனா­தி­பதித் தேர்­தலின் போது ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தேசிய அமைப்­பாளர் என்ற வகையில் முன்னாள் ஜனா­தி­ப­தியும் எனது சகோ­த­ர­ரு­மான மஹிந்த ராஜ­ப­க்ஷவின் தோல்­விக்கு முழு­மை­யான பொறுப்பை நானே ஏற்­றுக்­கொள்­கிறேன். எனினும் தோல்­விக்கு நானே பிர­தான கார­ண­மாக அமைந்­ததை போன்று அவரின் முன்னைய வெற்றிகளுக்கும் நானே பொறுப்பாவேன்.

ஆகவே அர­சியல் ரீதி­யாக பிழை­யான தீர்­மா­னங்கள் எடுத்­தி­ருப்­பினும் நான் ஒரு­போதும் ஊழல் மோச­டி­களில் ஈடு­ப­ட­வில்லை என்பதனை என்னால் உறுதியாக கூறமுடியும் என்று முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.